யுவன் மதம் மாறியது தவறில்லை சகோதரர் கார்த்திக் ராஜா கருத்து!

இடியோ, மழையோ, மின்னலோ… ஒரு கட்டத்தில் ஓய்ந்துதான் ஆக வேண்டும். யுவன்சங்கர் ராஜா இஸ்லாமியராக மாறியதால் அவரது வீட்டில் பெரும் புயலடித்து வந்தது. இசைஞானி இளையராஜா யுவனிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் என்றெல்லாம் தகவல்கள் பரவிக்கிடக்கிறது. ஏப்ரல் 5 ந் தேதி மதுரையில் நடைபெறும் இளையராஜாவின் இசைக்கச்சேரிக்கு கூட யுவன் வர மாட்டார் என்றே கூறிக் கொள்கிறார்கள். இந்த நேரத்தில் யுவன் இஸ்லாம் மதத்தை தழுவியது குறித்து அவரது சகோதரர் கார்த்திக் ராஜா வெளிப்படையாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

பிரபல நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்திருக்கும் அவர் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கு உங்கள் வீட்டில் என்ன மாதிரியான ரியாக்‌ஷன் இருந்தது?

எங்கள் வீட்டில் எல்லோருமே ஆதரித்தோம். அவர் தோசை சாப்பிட விருப்பப் படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். எங்க வீட்டில் தோசையே பண்ண மாட்டாங்க என்றாலும் கூட, அவர் சாப்பிடுறதில ஒன்றும் தப்பில்லையே. அது அவருடைய விருப்பம். அவர் இப்பவும் எங்களுக்கு யுவன்தானே. எங்கள் உறவுகள் அப்படியேதான் இருக்கிறது.

உங்கள் சகோதரர் யுவன், வைரமுத்துவுடன் இணைந்துள்ளாரே?

அவர் வைரமுத்துவுடன் இணைவதில் எனக்கு உடன்பாடில்லை.

Karthik Raja is not in agreement with Yuvan in teaming up with Vairamuthu!

Young music talent Yuvan Shankar Raja had announced sometime back that he has embraced Islam and following Islamic practices. Rumours about his family members are against him, and even his father Ilayaraja was not speaking to him at home, were spreading fast. It was also said that Yuvan would not be attending Ilayaraja’s grand live concert which he organises for his native people at Madurai.

However Karthik Raja, the elder sibling of Yuvan Shankar Raja has sealed the fate of the rumour mongers. In a recent interview to a daily he said that everyone at home respects his decision of converting to Islam. He continues to be the same Yuvan for everyone at home, Karthik clarified. When Karthik was quizzed about Yuvan teaming up with lyricist Vairamuthu, he responded saying he is not in agreement with Yuvan’s action.

2 Comments
  1. Mohanji says

    மதம் வேறு,மனம் வேறு ………..

  2. Sam says

    அதே தோசை கதை வைரமுத்துவுடன் இணைவதற்கும் சரிவராதா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எட்டுத்திக்கும் ஃபிகர் வேட்டை! அடங்க மாட்டாரு ஆர்யாவின் தம்பி!

ஆர்யாவின் தம்பி சத்யாவும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை அவர் நடித்த படங்கள் ஒன்று கூட போணியாகவில்லை. இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாக...

Close