ரஜினியின் அடுத்தப்படம் நண்பனுக்காக…?
ரஜினி ராஜாவாக இருந்தாலும், அவரை சுற்றி குசேலர்களும் உண்டு. ஆனால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களையும் ராஜாவாக்கிவிட முயற்சித்திருக்கிறார் அவர். ஆர்ப்பாட்டமாக உதவிகள் செய்யாவிட்டாலும் அமைதியாக செய்துவிடுவது அவரது இயல்பு. அருணாசலம் படத்தை தனது வாழ்க்கையில் தன்னோடு இருந்த முக்கியமானவர்களுக்காக அவர் தயாரித்தார். இந்த சினிமா வரலாற்றை அவ்வளவு எளிதில் கரையான் அழித்துவிடாது.
ஆனாலும் இந்த உதவி பெறும் நண்பர்களின் எண்ணிக்கை இன்னமும் முடிந்தபாடில்லை. இதுதான் தன்னுடைய முதல் படம் என்று ஒவ்வொரு நடிகரும் அவர் நடித்துக் கொண்டிருக்கும் தற்போதைய படத்தை நினைக்க வேண்டும். ஆனால் கடந்த சில படங்களாக இந்த படத்தோட நடிப்பதை நிறுத்திக்கலாம் என்கிற மூடில் தொடர்ந்து இருந்து வருகிறாராம் ரஜினி. அதை உறுதிபடுத்துவது போல அமைந்தது சமீபத்தில் பாக்யராஜ் சொன்ன ஒரு விஷயம். அது சரியா, தவறா என்பதை முடிவு செய்கிற உரிமை ரஜினியை தவிர அவரது ரசிகர்களுக்கே கூட இல்லை.
இப்போது நாம் சொல்ல வருவது மிக முக்கியமான விஷயம். ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குவதாக தற்போது முடிவாகி இருக்கிறது. இதற்காக அட்வான்ஸ் தொகையையும் பெற்றுவிட்டாராம் அவர். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட பகுதியை தனது நெடுநாளைய நண்பர் பகதுருக்கும் தனது அண்ணன் சத்யநாராயணாவுக்கும் பிரித்துக் கொடுக்கும் திட்டத்திலிருக்கிறாராம் ரஜினி.
ரஜினியின் அவலுக்காக ஆவலாக காத்திருக்கும் மேலும் சிலர், ரஜினியின் அதற்கடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அப்போதும் நடித்துக் கொண்டிருப்பார் அவர். குசேலர்கள் பெருக பெருக ரஜினி படம் வந்து கொண்டேயிருக்கும்….
Rajini’s friend Bahadhur will be beneficiary for Rajini’s film!
Rajini has been acting in films thinking every time that this should be his last film. However, it is still in thinking stage only and not even in planning stage. Because his generosity and gratitude overtake him and pulls him back to shooting spots. He used to give portions of money earned through his films to his friends who helped him in his initial stages, his friends in the industry who were financially suffering, his other friends in the industry to re-establish and resurrect their business in film industry, so on and so forth. But his helping nature has not died down yet, nor will it come to a close in near future. Such is the pressure he faces from all he knows them personally.
Now Rajini will be doing his next film under the direction of his long time friend KS Ravikumar. It is learnt that Ravikumar was already given advance money towards this project also. Though it was said that Rockline Venkatesh, Rajini’s friend would be producing the film, he had refuted the reports sometime back saying that he met Rajini only for the purpose for getting distribution for Kochadaiiyaan. But the fact of the matter is whosoever produces the film, Rajini seems to have decided that a part of the share in profit would go to Rajini’s friend Bahadhur and Rajini’s brother Sathyanarayana. This is one of the reasons he is still ‘Thalaivar’ to so many!