ரஜினியின் வயது 162

ரஜினியின் வயது 162. இப்படி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. டிசம்பர் 12 ந் தேதி ரஜினிக்கு பிறந்த நாள். அதற்கு முன்னதாக தமிழகமெங்கும் இப்படியொரு போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. ரஜினி மட்டுமல்ல, உலகின் முன்னணி பிரபலங்கள் பலரது புகைப்படத்துடன் அவர்களின் வயதை தாறுமாறாக அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த சுவரொட்டியை பார்த்து, ரசிகர்கள் என்னவென்று புரியாமல் வியந்தபடியும் தங்களுக்குள் விவாதித்தபடியும் செல்கிறார்கள்.

‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்திற்கான பிரமோஷன் போஸ்டர்தான் அது என்றாலும், படத்தில் இதுகுறித்த விளக்கங்கள் காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தோடு பத்திரிகையாளர்களும் டைரக்டர் கஸாலியை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள்.

கஸாலி கூறும்போது, ‘இந்த போஸ்டரில் உள்ள பிரபலங்களுக்கு நாங்கள் குறிப்பிட்டிருக்கும் வயதிற்கும், கதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நம்மால் வியக்கப்பட்ட இந்த பிரபலங்கள் சராசரி வயதிற்கும் மேல் இன்னும் ஐம்பது ஆண்டுகளோ, அதையும் தாண்டியோ, மாறாத இளமையோடும் உற்சாகத்தோடும் வாழ்ந்தால் அது எவ்வளவு சந்தோஷமான விஷயம்? அப்படியொரு கனவை மெய்யாக்க நினைக்கிற விஷயம் ஒன்றும் படத்தில் இடம் பெறுகிறது. அதை சூசகமாக சொல்லதான் இப்படி ஒரு போஸ்டரை உருவாக்கினோம்’ என்றார்.

கஸாலியின் கனவு நனவானால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!

Director Ghazali promotes his film differently

Director Ghazali who is directing his film Saindhadamma Sainthadu has found an innovative way to promote his film cashing on the eve of Super Star Rajini’s birthday. The poster of his film depicts several leading personalities with their ages almost trebled, with Rajini’s age has been mentioned as 162. When asked about this, the director responded saying that there is a direct relevance between the message in the poster and the film. It is like how people would be very happy to see these stalwarts live those ages with youth and vigour. Can it happen? Yes, says Ghazali. He says he has stuffed the film with a clear message that such things are possible in real life. So he has decided to make such a poster, reveals Ghazali.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாய் செத்துப்போச்சு…. த்ரிஷா கண்ணீர்!

‘என் தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுபா....’ என்று ஜனகராஜ் இப்போது அழுதால் பொசுக்கென அவர் வாயை பொத்துவது த்ரிஷாவின் கரமாகதான் இருக்கும். ஐந்தறிவுகளிடம் அவர் காட்டும் அன்பை ஆறறிவுகளிடம்...

Close