ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டாராம்… எஸ்.வி.சேகர் ஆணித்தரம்

கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல சேனல் ஒன்றில் ஒரு முக்கியமான விவாதம் நடந்தது. நகைச்சுவை நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர், நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். தலைப்பு? ‘நடிகர்களின் வாய்ஸ் அரசியலில் எடுபடுமா?’ என்பதுதான். விந்தியா, வையாபுரி, சிங்கமுத்து, வெண்ணிறாடை நிர்மலாவெல்லாம் ஊர் ஊராக பிரச்சாரத்திற்கும் கிளம்பியிருக்கும் இந்த நேரத்தில் இந்த தலைப்பு அவர்களை நோக்கியல்ல, ரஜினியை நோக்கிதான் என்பதை போல போனது அந்த விவாதம்.

நடிகர் ஆனந்தராஜ் பேசியதுதான் செம வேடிக்கை. இவர் பிரசாரத்திற்கு போகிற இடங்களில் அன்பு மிகுதியால் இவர் கைகளை கிள்ளிவிடுகிறார்களாம் ரசிகர்கள். ‘பாருங்க என் கையை’ என்று காட்டினார். (இனிமே இந்த பக்கமே வராதே என்று கிள்ளியிருப்பார்களோ?) அப்படியே பேச்சு ரஜினி பக்கம் போனது. விஜயகாந்த்தை விட ரஜினிக்குதான் அதிக செல்வாக்கு என்று கூறினார் ஆனந்தராஜ்.

வாய்ஸ் கொடுக்கும் போது அது மக்களின் மனசோடு ஒத்துப்போனால் அந்த வாய்ஸ்சுக்கு மரியாதை இருக்கிறது. மக்கள் மனசில் இருப்பதற்கு எதிராக வாய்ஸ் கொடுத்தால் அதை மக்கள் மதிப்பதில்லை என்றார் எஸ்.வி.சேகர். ரஜினி ஒருமுறை வாய்ஸ் கொடுத்தபோது ஒப்புக் கொண்ட மக்கள், அதே ரஜினி வேறொரு முறை கொடுத்த வாய்ஸ்சுக்கு என்ன மரியாதை கொடுத்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் அவர். ஒரு ஹீரோவோட படத்தை ஜெயிக்க வைக்கிற அதே ரசிகர்கள்தான் அவர்களுக்கு பிடிக்காத படம் வரும்போது அதே ஹீரோவின் படத்தை  தோற்கடிக்கிறார்கள் என்றும் பல விளக்கங்களை கொடுத்தார். கடைசியாக அவர் சொன்ன ஒரு விஷயம்தான் இன்னும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பிக் கொண்டிருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும்.

‘ரஜினி ஒரு நாளும் அரசியலுக்கு வர மாட்டார். வரவே மாட்டார்’ என்றார் எஸ்.வி.சேகர். பிஜேபி பிரமுகரான எஸ்.வி.சேகரின் யூகம் பற்றி கவலைப்பட வேண்டியது நாமல்ல என்றாலும், ஒரே ஒரு கேள்வி. தேர்தலுக்கு முன்னால் பி.ஜே.பி கேண்டிடேட் யாரும் ரஜினியை பார்த்து ஆசி வாங்க போக மாட்டீங்கதானே?

SV Sekhar predicts Rajini won’t enter politics! 

Recently some of the film actors have participated in a debate in a TV channel on the subject ‘Whether actors’ canvassing influence the voters’? Although the participants of the debate spoke in general terms, their main subject of reference was towards Rajini. AnandRaj who participated in the debate said that an actor has to endure the inconveniences and pressure during canvassing time and meeting with voters. He also insisted that Rajini has more pepople’s power than Vijaykanth, as people are more prone to listening to Rajini’s voice. To this comedian SV Sekar countered that voices of actors do not count in the voting. If the people listen to an actor’s voice, then all the films of the actors should run. But only films liked by the people run and rest disappear without a trace, he argued. He cited the example saying that Rajini’s voice was accepted on one occasion during the election, but was not agreed upon by the same people in the next election. Finally he went on to predict that Rajini would not enter politics for sure, he concluded.

Whether Rajini enters politics or not, whether people listen to his voice or not, it is immaterial, as long as his fans listen to him. It is exactly for this reason, politicians throng his place and not vice versa!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் ஹெல்மெட்டை கழற்ற வேண்டிய நேரமிது!

அஜீத் படம் என்றால் அஜீத்திற்குதான் பிசினஸ். விஜய் படம் என்றால் விஜய்க்குதான் பிசினஸ். ரசிகர்களும் இவர்களின் முகத்திற்காகதான் உள்ளே வருகிறார்கள். இந்த பொத்தாம் பொதுவான ஃபார்முலா புரியாதவர்கள்தான்...

Close