ரஜினி இன்னும் வாழ்த்து சொல்லவில்லை – பத்மபூஷண் கமல்!

இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என்று ஒரு சில மாதங்களுக்கு முன் ஆக்ரோஷத்தோடு பேட்டியளித்த கமல்ஹாசனுக்கு அதே இந்தியா கொடுத்த பெருமை இரண்டு. ஒன்று அவரை அப்படி சொல்ல வைத்த விஸ்வரூபம் படத்தை வெற்றிபெற வைத்தது. இன்னொன்று பத்மபூஷண் விருது. வெற்றியோ, தோல்வியோ, வேதனையோ, சோதனையோ, எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்கிற பக்குவம் எப்போதும் கமலுக்கு உண்டு. (அந்த இந்தியாவை விட்டு வெளியேறுகிற விஷயத்தை தவிர…) இந்த விருது மட்டும் அவரை தலைகீழாக குதிக்க வைத்துவிடுமா என்ன? தனக்கேயுரிய அழகான வார்த்தைகளுடன் பிரஸ்சை எதிர்கொண்ட கமல் சொன்ன பதில்கள்-

பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு கற்றுக்கொடுத்தவர்கள் கூட இந்த விருதை வாங்காமலே இறந்து போய் விட்டார்கள். எனக்கு பத்மபூஷண் விருது கிடைத்திருப்பதில், சந்தோஷம். இதுவரை செய்ததற்காக மட்டும் இந்த விருது எனக்கு கிடைக்கவில்லை. இனிமேல் செய்யப்போவதற்காகவும் கிடைத்துள்ள விருதாக இதை கருதுகிறேன் என்று கூறிய கமல் தொடர்ந்து தனக்கேயுரிய வார்த்தை லாவகத்தோடு பிரஸ்சை கையாண்டதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

தாமதமாக இந்த விருது கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?

நான் எப்போதுமே மெதுவாகத்தான் செல்வேன். இந்த நாட்டில் மக்கள் கொடுக்கும் விருதுதான் முதன்மையானது. மற்றதெல்லாம் அப்புறம்தான்.

தெண்டுல்கருக்கு 25 ஆண்டு கால சாதனைக்காக பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது. உங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டு இருக்கிறதே?

இது, வியாபாரம் அல்ல. சுதந்திர போராட்டம் மாதிரி. இதற்கு சம்பளத்தை எதிர்பார்க்கக்கூடாது. கிடைத்தால் சந்தோஷம். கிடைக்காவிட்டாலும் வருத்தம் இல்லை. இந்த விருதுக்கு மக்கள் என்னை தகுதியாக்கியது மாதிரி, பாரத ரத்னா விருதுக்கும் ஒருநாள் தகுதி பெற வைப்பார்கள்.

ரஜினிகாந்த் உங்களுக்கு வாழ்த்து சொன்னாரா?

இன்னும் சொல்லவில்லை. நிச்சயமாக வாழ்த்துவார்.

பத்மபூஷண் விருதை யாருக்கு சமர்ப்பிப்பீர்கள்?

எனக்கு கற்றுக்கொடுத்தவர்களுக்கும், என் குடும்பத்தினருக்கும் இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன். சிலரிடம் நான் சம்பளம் கொடுத்து கற்றுக்கொண்டேன். சிலர் எனக்கு சம்பளம் தந்து கற்றுக்கொடுத்தார்கள். சண்முகம் அண்ணாச்சி, கே.பாலசந்தர் ஆகிய இருவரும் எனக்கு சம்பளம் தந்து கற்றுக்கொடுத்தவர்கள். இது, மறக்க முடியாத நன்றிக்கடன். தீர்க்க முடியாத நன்றிக்கடன்.

‘விஸ்வரூபம்’ படத்தில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக இந்த விருதை நினைக்கிறீர்களா?

எனக்கு வரும் இகழ்வுகளை மட்டுமே என் தனி சொத்தாக எடுத்துக்கொள்வேன். புகழ் வரும்போது, மற்றவர்களுடன் பங்கிட்டு கொள்வேன்.

ஆஸ்கார் விருது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நாம் இந்த ஊரில் வியாபாரம் செய்கிறோம். நமக்கு ‘ஐ.எஸ்.ஐ.’தான் தேவை. அந்த நாட்டுக்கு போகும்போதுதான் யு.எஸ்.ஐ. வேண்டும்.

ஹாலிவுட்டுக்கு போகிறீர்களா?

தேவைப்பட்டால் போய்த்தான் ஆக வேண்டும். அவர்களுக்கு நான் தேவைப்படும்போதும், எனக்கு அவர்கள் தேவைப்படும்போதும், அது நடக்கும்

இந்தியா குடியரசாகி 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாடு தன்னிறைவு அடைந்து விட்டதாக கருதுகிறீர்களா?

அந்த நிலையை அடைந்துவிட்டதற்கான ஆதாரமும் இருக்கிறது. அடையவில்லை என்பதற்கான அடையாளமும் இருக்கிறது. முழுமையான வெற்றியை பெறவில்லை. குறிப்பாக, சாதி இன்னும் ஒழியவில்லை. ‘‘சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாடிய பாரதியாரின் பாப்பாக்களுக்கும் கொள்ளுப்பேத்தி வந்து விட்டார்கள். என்றாலும், சாதி ஒழியவில்லை. சாதி ரத்தம் இன்னும் வடிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய குடியரசுக்கு 65 வயது என்று எடுத்து கொள்ளக்கூடாது. 6.5 வயது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘விஸ்வரூபம்–2’ படம் எப்போது வரும்?

படம் முடிந்து விட்டது. இசை மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது.

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?

இங்கிருக்கும் எல்லோருமே அரசியல்வாதிகள்தான். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஓட்டுப்போடுகிறோம். கை விரலை கரையாக்கிக்கொள்கிறோம். அந்த கரை போதும்.

சுயசரிதை எழுதுவீர்களா?

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எனக்கு பொய் பேச தெரியாது. சுயசரிதை எழுதினால், உண்மையை சொல்ல வேண்டியிருக்கும். அப்படி உண்மையை எழுதினால், சிலருடைய மனசு காயப்படும். அப்படி காயப்படுவதை நான் விரும்பவில்லை.’’

I dedicate the Padma Bhushan Award to my guru, family and fans – Kamal

Ulaganayagan Kamal who has been chosen for Padma Bhushan met the press to share his happiness. Earlier in a statement he said that he is not sure if he deserved the award, but would work hard to make it deserving. “I am happy that I have received the award and congratulations to other awardees and to my best friend Variamuthu on being chosen for Padma Bhushan” added Kamal in the statement.

He said that he dedicates this award to his Gurus in his life, family and fans. Shanmugam and K. Balachandar have given money for my learning and I will be ever indebted to them, he added.

When asked if he felt the award was given late, he answered in the negative. When asked Sachin was given Bharat Rathna for his 25 years whereas he has served film industry over 50 years, he responded saying that people’s good wishes will get him that award in future. He answered in negative when asked if Rajini congratulated him, but added he would surely convey his best wishes.

When asked when he would join Hollywood he said that as and when each of us needs each other, it will happen.

On entering politics he said he is not inclined to join politics. On Vishwaroopam 2 release he said that the post production work is going on and once it is completed would announce the release date.

On writing autobiography, he said he is not interested to write biography because he would always tell the truth and it may likely to cause hurt on theirs unintentionally. So I will not write my biography, he quipped.

1 Comment
  1. Snake says

    ‘சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாடிய பாரதியாரின் பாப்பாக்களுக்கும் கொள்ளுப்பேத்தி வந்து விட்டார்கள். என்றாலும், சாதி ஒழியவில்லை. சாதி ரத்தம் இன்னும் வடிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய குடியரசுக்கு 65 வயது என்று எடுத்து கொள்ளக்கூடாது. 65 வயது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்
    —————————————-
    He was talking about vairamuthu Ramaswamy Thevar

    http://m.ibnlive.com/news/list-of-padma-awardees-for-the-year-2014/447789-3.html

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தி.மு.க வில் இருந்து மு.க.அழகிரி அதிரடி நீக்கம்

திமுகவில் இருந்து மு.க. அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மதுரை மாவட்ட திமுக கூண்டோடு கலைக்கப்பட்ட நிலையில், இன்று அழகிரியே கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். திமுக தென்...

Close