ரஜினி, கமல், அஜீத்…. -லிஸ்ட் போடுகிறார் அமலாபால்
முன்பெல்லாம் எந்த நடிகை பேட்டியளித்தாலும் யாருடன் நடிக்க ஆசை என்று ஒரு கேள்வியை நிருபர்கள் கேட்பதும், அதற்கு ரஜினி மற்றும் கமலுடன் நடிக்கதான் ஆசை என்று அவர்கள் பதிலளிப்பதும் வாடிக்கை. இப்போது இந்த கேள்வி அப்படியே தொடர்கிறது. ஆனால் பதிலில்தான் மாற்றம். புது நடிகைகள் அத்தனை பேரும் விஜய் அஜீத்துக்கு மாறி அநேக நாளாகிவிட்டது.
இதற்கெல்லாம் கவலைப்படுகிற ஸ்டார்களாக இல்லை ரஜினியும் கமலும். ஆனால் ரஜினிக்கு அனுஷ்கா மீது ஒரு பரிவும், கமலுக்கு நயன்தாரா மீது பரிவும் இருப்பதாக கும்மி கொட்டுகிறது கோடம்பாக்கம். இதற்கிடையில் அமலாபால் ஆசைப்பட்ட ஒரு விஷயம் கோடம்பாக்கத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது. ஆமாம்…
ரஜினி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிச்சுரணும். அதற்கு எப்படியாவது ஏற்பாடு பண்ணுங்க. இல்லேன்னா அவரை சந்திக்கவாவது ஏற்பாடு பண்ணுங்க. நானே சான்ஸ் கேட்டுக்கிறேன் என்கிறாராம் தனது மேனேஜர்களிடம். ஆனால் மேனேஜர்களே ரஜினியை பார்க்க தவம் கிடக்கும் போது அமலா விஷயத்தை அவர்கள் எங்கே போய் ஒப்பிக்க?
ரஜினி விஷயத்தில் வெற்றி தோல்வி சகஜம் என்பதால், அமலாவின் ஒரே நேர்க்கோட்டு பார்வை இப்போது அஜீத் பக்கம் திரும்பியிருக்கிறது. ஒரு படத்திலாவது அவரோட ஜோடி சேர்ந்துரணும். அதுதான் என் லட்சியம் என்று ஒப்பனாக பேட்டியளித்து வருகிறார்.
அவர் காதுல விழுந்துச்சா? அதுதான் இப்போது கேள்வி.