ரஜினி- கமல் நேரடி மோதல்?

ரஜினியும் கமலும் ஒரு காலத்திலும் மோதிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் நட்பு அப்படி. ஆனாலும் கமல் விஸ்வரூபம் பார்ட் 2 க்கு காட்டுகிற துல்லியத்தை பார்த்தால் அது ரஜினியின் கோச்சடையானுக்கு தொந்தரவாக வந்து அமையுமோ என்பது போலவே இருக்கிறது சுச்சுவேஷன். இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருக்கிறதாம் விஸ்வரூபம் படத்திற்கு. அதுமட்டுமல்ல, ஆரோ 3டி தொழில் நுட்ப வேலைகளை முடிக்கவே ஒரு மாதம் தேவைப்படும் என்கிறார்கள்.

இந்த வேலைகளையெல்லாம் முடிப்பதற்காக வெளிநாடு செல்லவிருக்கும் கமல் அங்கு ஒரு மாதம் தங்கியிருப்பாராம். அவர் ஜனவரியில் திரும்பி வந்து பிப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்தால் கூட, மார்ச்ல எக்சாம் டைம். தள்ளி வாங்க சார் என்பார்கள் விநியோகஸ்தர்கள். அதையும் கருத்தில் கொண்டால் ஏப்ரலில்தான் படம் வெளியாகும் என்கிறார்கள். இந்த பொங்கலுக்கு அஜீத்தும், விஜய்யும் மோதுவது போல, தமிழ் புத்தாண்டு தினத்தில் தவிர்க்க முடியாத மோதலாக அமையலாம் விஸ்வரூபமும் கோச்சடையானும். ஆனால் அவ்வளவு காலமெல்லாம் பொறுத்திருக்க தேவையில்லை. கோச்சடையான் படத்தை ஜனவரி இறுதிக்குள் வெளியிட்டு விடலாம் என்று கூறியிருக்கிறாராம் ரஜினி.

அவரே சொல்லிவிட்ட பிறகு ஆட்சேபணை என்ன கிடக்கு? விறுவிறுவென அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள். ரஜினி கமல் மோதலை தவிர்ப்பதுதான் இன்டஸ்ரிக்கு நல்லது. இன்டஸ்ரிக்கு நல்லதாக இல்லையென்றால் அதை ரஜினியும் கமலும் செய்யவும் மாட்டார்கள். அப்படின்னா?

என்னவோ போங்க… நாங்களும் குழம்பி, உங்களையும் குழப்பி….

Rajini decides to relase Kochadaiiyaan in Jan.2014

Kochadaiiyaan and Vishwaroopam 2 are the two films that garner the attention not only Tamil industry but the entire India and Hollywood as well. There was so much hard work and creativity gone into the making of those two films, neither Kamal nor Rajini would prefer to clash with each other release on the same day. While Kamal is now completely focussed to wrap up the shoot and begin the graphic work for the film and make it ready for April release, since March will be a exam time.

Kochadaiiyaan which is undergoing graphic works at China currently would be ready before the end of this month for release. However certain financial problems are to be countered with and hence the makers have safely put it to April release as well.

However the good news is that now Rajini himself has stepped in and advised the makers not to postpone and release the film by Jan.2014 end. If Rajini decides, it is final. So we should be able to see Kochadaiiyaan from end Jan.2014.

2 Comments
  1. rk says

    garner attention not only india,hollywood also!!!!!!!!ha ah hahahaha……….

  2. Balaji says

    Rajini is a great person.
    Long live our super star Rajini

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முன்னாள் மாமனாரிடம் கறார்…. நடுங்க வைத்த நயன்தாரா!

நயன்தாராவின் சம்பாத்தியத்தையெல்லாம் ஏதாவது ஒரு சீசன் புயல் வந்து கபளீகரம் செய்துவிட்டு போகும். இந்த கொடுமை காதல் என்ற பெயரில் நடந்து வருவதுதான் இன்னும் பெரிய கொடுமை....

Close