ரஜினி முகம் மோசமாக இருக்குமாம்… விமர்சிக்கிற ‘சுமார் மூஞ்சு’ இவர்தான்!
கருப்பா பிறந்த எல்லாருமே காலரை துக்கிவிட்டுக் கொண்டது ரெண்டே சந்தர்ப்பங்களில்தான். ஒன்று காமராஜர் முதல்வராக வந்தபோது. மற்றொன்று ரஜினி அறிமுகமான பின்.
தமிழ்சினிமாவில் சிவாஜியின் தாக்கம் இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை ரஜினியின் தாக்கம் இல்லாமல் நடிக்க முடியாது என்பதும். அப்படிப்பட்ட ஒருவரை சகிக்கவே சகிக்காத ஒரு பாலிவுட் நடிகர் சகிக்க முடியாத வார்த்தைகளால் விமர்சித்திருப்பது அநியாயம்.
“தென்னிந்திய நடிகர்களிலேயே ரஜினி மட்டும் தான் பார்க்க மோசமாக இருப்பார்” என்று நக்கலாகக் கூறியிருக்கிறார் ஹிந்தி நடிகரான கமால் ரஷீத் கான்.
சமீபத்தில் ரஜினியை பற்றி தந்து ட்விட்டரில் விமர்சனம் செய்திருக்கும் கமால் கான் “ தென்னிந்திய நடிகர்கள் எல்லோரும் பார்க்க ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்கள். ஆனால் ரஜினி மட்டும் தான் பார்க்க மோசமாக இருப்பார்” என்று கூறியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரஜினியின் ரசிகர்கள் “உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகரைப் பற்றி இந்த மாதிரி நக்கலாக பேசலாமா?” என்று ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பக்கத்துல இருக்கிற படத்தில் இருக்கிற பேரழகன்தான் கமால் ரஷித்கான். இந்த மூஞ்செல்லாம் நடிக்கறதே பெருசு. இதுல கருத்து சொல்லுதாம் கருத்து…
You shut your mouth & ——–. A Great Super Star Rajini.