ரஜினி வீட்டில் ஒரு கும்பமேளா! -இது மார்ச் 11 ரகசியம்…
வருகிற மார்ச் 11 ந் தேதி போயஸ் கார்டனில் நடக்கவிருக்கிறது ஒரு கும்பமேளா. முதல்வர் ஜெ. வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரரான ரஜினிக்காகதான் இந்த கும்பமேளாவே! அட… இதென்ன ஆச்சர்யம் என்பவர்கள் மேலே படிக்கப் போகும் விஷயத்தால் மேலும் ஆச்சர்யமாவீர்கள்.
இந்த இனிய நாள்தான் சிவாஜிராவ் கெய்க்வாட், ‘ரஜினிகாந்த்’ என்று பெயர் மாற்றம் பெற்ற நாள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை மிக சிறப்பாக கொண்டாடுகிற வழக்கம் இருக்கிறதாம் ரஜினி பேமிலிக்கு. ரஜினியின் நெருங்கிய நண்பர்கள், ஆரம்பகாலத்தில் ரஜினியை ஆதரித்தவர்கள். அவருக்கு நல்ல நல்ல படங்களாக கொடுத்து அவரை ஏணியில் ஏற்றிவிட்டவர்கள் என்று சில முக்கியஸ்தர்களை மட்டும் அன்று தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பதாராம் லதா.
வெளி உலகத்திற்கு தெரியாமல் ரகசியமாகவே நடந்து வரும் இந்த விழா இந்த முறையும் அதே மாதிரி எளிமையாக ஆர்ப்பாட்டமில்லாமல் நடைபெற இருக்கிறது. ஏற்றி விட்ட லிஃப்ட் ஒயரை அறுத்துவிட்டு போகிற நடிகர்களுக்கு மத்தியில் இப்படியொரு வழக்கத்தை பல வருடமாக கடைபிடித்து வரும் ரஜினியும் அவரது பேமிலியும் கிரேட்தான்!
11th March special day for Rajini and family!
11th March is Rajini’s birthday! No we are not of real birthday of Sivaji Rao which is on 12th Dec. which everyone knows. We are talking of birthday to our super star Rajinikanth. Yes, director K Balachandar has christianed Sivaji Rao as Rajinikanth on 11th March, and hence it is an important date for Rajini and his family as well.
Rajini and his wife will host grand reception to those who helped Rajini during his initial struggling days and those who gave hits, his friends from Bengaluru who helped him in realising his dream, and all those who helped him in his career. This event was exclusive only between Rajini family and their guests. This has been going on for several decades and still it is know different.
This year too on 11th March Rajini and family would be hosting a grand reception like previous years. We salute the great gesture of Rajni and Latha Rajini in acknowledging the help they received from everyone, year after year.