ரஞ்சிதா என்பது இனி பூர்வாசிரமப் பெயர் மட்டுமே! -இனி அவர் ‘மா ஆனந்தமாயி….’

இனிமேல் ரஞ்சிதாவை ரஞ்சிதா என்று அழைத்தால் ஜீவாத்மா, பரமாத்மா, சைட்ல திரியும் சவுண்டாத்மா உள்ளிட்ட மொத்த ஆத்மாக்களும் சேர்த்து மொத்தினாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அவர் சுத்த சன்னியாசியாகிவிட்டார். ரஞ்சிதா என்பது அவரது பூர்வாசிரமப் பெயராகிவிட்டது. புதிதாக சன்னியாசம் மேற்கொண்டிருக்கும் அவர் இனிமேல் ‘மா ஆனந்தமாயி’ என்று அழைக்கப்படுவாராம். இத்தனை காலம் நித்தியானந்தாவுக்கு பணிவிடை செய்யும் பக்தைகளில் ஒருவராக கருதப்பட்ட ரஞ்சிதா, நித்தியின் பிறந்தநாளான டிசம்பர் 27 ந் தேதி முழு சன்னியாசம் ஏற்றுக் கொண்டார். இனிமேல்தான் அவர் ஆசிரமத்தாலும் சாமியாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரபூர்வ சிஷ்யை.

பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் இதற்கான விழா ஏக தடபுடலாக நடந்தேறியிருக்கிறது. ஆசிரமத்திலிருக்கும் புனித குளத்தில் குளித்து காவி உடை அணிந்து கொண்டார் அவர். பிறகு நிருபர்களுக்கும் பேட்டியளித்திருக்கிறார். அப்போது அவர் கூறியதென்ன?

”சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். இனிமேல் எப்போதும் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில்தான் இருப்பேன்” மிகவும் நிதானமாகவும் உறுதியாகவும் அறிவித்துவிட்டார் மா ஆனந்தமாயி.

நாடோடி தென்றலில் வாத்து மேய்ச்ச பொண்ணு இனி பக்தர்களையும் மேய்க்கட்டும்…. யாரும் அவருக்கு மூக்கு குத்தாம பார்த்துக்க வேண்டியது அருள்மிகு குருசாமியோட பொறுப்பு!

Ranjitha turns to sanyas, to live in Nithyananda Ashram

Nadodi Thendral girl Ranjitha who was labelled in the sexual allegations with Swami Nithyananda has turned to sanyas effective from 27th Dec. the birthday of Swami Nithyananda. According to reports from Bengaluru she had embraced sanyas after seeking the blessings of Nithyananda. She will be hereafter called as Ma Ananthamayee. She is said to have told that she will follow Ahimsa, Sathya and spiritualism henceforth, and would live in the Nithyananda Swamiji’s Ashram.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி இப்படி பண்ணுவாருன்னு நெனச்சுக்கூட பார்க்கல….!

பணமே பதுக்கல் சாமியாக இருக்கும் பலருக்கு மனமே மந்திரசாவி என்பது மட்டும் புரியாது. ஆனால் தனது ஆரம்பகால வாழ்வை அவ்வப்போது நினைத்துப் பார்க்கும் ரஜினி செய்த ஒரு...

Close