ரம்யா நம்பீசனின் சேச்சி பாச பேச்சு? – திருந்துவீங்களா தமிளன்ஸ்…?
சட்டியிலிருந்து இறக்கப்பட்டு இரண்டு நாட்களாகியும் இன்னும் சூடு குறையவில்லை. எல்லாம் ரம்யா நம்பீசன் இரு தினங்களுக்கு முன் பேசிய இனப்பாச பேச்சின் உஷ்ண விவகாரம். ‘பாண்டியநாடு’ படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் ரம்யா நம்பீசன். ‘பீட்சா’ ஹிட்டுக்கு பிறகு கூட ரம்யா நம்பீசனை தமிழ்சினிமா கண்டு கொள்ளவில்லை. அப்படி கண்டு கொண்ட ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களை குண்டு கொண்டு தாக்கினார் ரம்யா என்பது வேறு விஷயம். ஐ மீன் அந்த குண்டு, சம்பளம் என்கிற மெகா குண்டு!
நான் நல்லா பாடுவேன். யாராவது வாய்ப்பு கொடுத்தால் போதும் என்று சினிமா எக்ஸ்பிரசில் ஒரு பேட்டியளித்தார் அவர். அதை பார்த்துவிட்டு கொடுக்கப்பட்ட வாய்ப்பா, அல்லது குரல் தேடி அலைந்த நெடும்பயணத்தில் சிக்கிய ஒரு டம்ளர் பானை வாட்டரா? தெரியவில்லை. பாண்டியநாடு படத்தில் வரும் ‘அழைச்சுஃபையிங்… வளைச்சுஃபையிங்…’ என்ற பாடலை இவர்தான் பாடியிருக்கிறார். இமானின் ட்யூனும் இவரது குரலும் பாடலை டாப் டென்னில் கொண்டு போய் வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ரம்யா? கொண்டாடப்பட வேண்டியவரா? பின்வரும் பேச்சை கேட்டுவிட்டு முடிவு செய்ய வேண்டியது கோடானு கோடி தமிழ் புலவர்களும் புரவலர்களும்தான்.
பாண்டியநாடு ஆடியோ விழாவில் இவரை மேடையில் ஏற்றி பேசவும் வைத்தார்கள். ‘நான் ஏன் இந்த விழாவுக்கு வந்தேன்னா லட்சுமிமேனன் எங்க கேரள மண். என் இனத்தை சேர்ந்தவங்க. அதனால்தான்’ என்றார் கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல். இல்லேன்னா வந்திருக்கவே மாட்டேன். பாடியிருக்கவே மாட்டேன் என்கிற டோன் அதில் அப்பட்டமாக தெரிந்தது.
ஆணானப்பட்ட தமிழனுங்களே… இனிமே இந்த பொண்ணு வந்தா பீட்சாவை புடுங்கிட்டு பிளேட்டை மட்டும் கொடுத்து அனுப்ப வேண்டியதுதான்…
Racist remarks by Remya Nambeesan enough to cause damage
Remya Nambeesan has crooned a song in Pandia Naadu which allowed her to participate in the recent audio release function of the film. We are not complaining about her participation but what we have noticed was the racist remarks she has uttered during her speech. She said that because Lakshmi Menon was from Kerala, she is happy to participate in it. The tone and tenor of the speech seems to be such, but for Lakshmi Menon she would not have participated. Remya is an upcoming actress and singer and for her to indulge in indecent speech may be out of arrogance or ignorance. It would be better if she is made to understand how much damage such speech can do, which will be a loss to film industry, surely. Only in film industry, one can see people from other religions, cast, community, states, are mingling as one. Please don’t be a reason to spoil the well-knit fabric called film industry!