ராகவா லாரன்ஸ் – டாப்ஸி நித்யாமேனன் நடிக்கும் முனி – 3 கங்கா – டிசம்பர் வெளியீடு

காஞ்சனா வெற்றியை தொடர்ந்து ராகவாலாரன்ஸ் எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் முனி –  3 கங்கா படத்தின்  பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள்.

மற்றும் ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –   ஒளிவீரன்

எழுதி இயக்கும் ராகவா லாரன்ஸ் படம் கூறுகையில் ..வருகிற 4 தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாகப் பட உள்ளது. 20நாட்கள் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்கப் பட உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது.

கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இரண்டு மாதம் தேவைப்படுகிறது. படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

இடையில் சிலமாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் தான் இந்த காலதாமதம். காஞ்சனா போலவே இதுவும் வித்தியாசமான மிரட்டலான படமாக உருவாகி உள்ளது.

நிறைய செலவு செய்து படத்தை உருவாக்கி வருகிறோம் என்றார் லாரன்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அரண்மனை ட்ரெய்லர்

https://www.youtube.com/watch?v=W_dUezR125o

Close