ராஜா ராணி -விமர்சனம்

ஒரு ராஜாவும் ஒரு ராணியும் அவரவர் ராஜாவையும் ராணியையும் தொலைத்துவிட்டு ‘ரம்மி’க்காக காத்திருக்கும் கதைதான் ரா.ரா. ‘மௌன ராகத்தை அப்படியே அடிச்சு வச்சுருக்காங்களாம்ல…’ என்று புரளி புத்திரன்கள் யாராவது முச்சந்தியில் நின்று மூக்கு சிந்தினால், அவர்களை கூசாமல் பின்னங் கழுத்தில் அறையலாம். அதே அளவு சுவாரஸ்யமான திரைக்கதையுடனும், அதைவிட சுவாரஸ்யமான சம்பவங்களுமாக இந்த ராஜா ராணியை அழகாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெட்லி, ஸாரி… அட்லீ!

காதலில் தோல்வியடைந்த ஆர்யாவும் நயன்தாராவும் வேண்டா வெறுப்போடு கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இந்த மேரேஜ் லைஃப் எங்காவது புட்டுக் கொள்ளாதா என்கிற பேராசையில் ஒருவரையொருவர் டார்ச்சர் செய்ய, ஒரு கட்டத்தில் ஒருவர் மீது மற்றவருக்கு பச்சாதாபம் வருகிற அளவுக்கு ‘பிளாஷ்பேக்’ தெரிந்துவிடுகிறது. என்னை விட அவன் பாவம் என்று நயன்தாராவும், என்னை விட அவள் பாவம் என்று ஆர்யாவும் நினைக்கிறார்கள். அப்படியிருந்தும் ஈகோ இடையூறு செய்கிறது. தொடரும் இழுபறிக்கு நடுவில் ‘நாங்கதாம்ல பாவம்’ என்று ரசிகர்களை கதறவிடாமல் இவர்களுக்குள் ஒரு நல்ல தீர்ப்பை கொடுத்து நெஞ்சில் நியாயம் தடவுகிறார் அட்லீ.

நகைக்கடை தராசில் நான்கு கேரக்டர்களையும் அளந்து வைத்த மாதிரி கொஞ்சம் கூட பிசிறில்லாமல் ஆர்யா- நஸ்ரியா, ஜெய்- நயன்தாரா ஜோடிகளை பயன்படுத்தியிருக்கிறார் டைரக்டர். ரெண்டு ஜோடியில் எது பெட்டர் என்று பெட் கட்டினால், ரசிகர்களை பெட்டில் சேர்க்கிற அளவுக்கு கன்பியூஸ் ஆவார்கள். அந்தளவுக்கு சுவாரஸ்யத்தை வழிய விடுகிறது ஜோடிகளின் ஒட்டலும் உரசலும்.

ஜெய்யுக்கெல்லாம் நயன்தாராவா என்ற வயிற்றெரிச்சலுடன் பிளாஷ்பேக்கை மெல்வதற்கு ஆரம்பித்தால், அடேயப்பா… அதில்தான் எவ்வளவு டேஸ்ட்? கஸ்டமர் கேர் ஒன்றில் வேலை செய்யும் ஜெய், நயன்தாராவின் போன் கால் வந்தாலே பதறி சிதறுவதும், பின் அதே நயன்தாராவிடம் ‘நானும் ஐ லவ்வுங்க’ என்று குழைவதும் பிரமாதம். இந்த படத்தில் ஜெய்யின் முக பாவங்களை நினைத்து நினைத்து சிரிக்கலாம். கூடவே சத்யன் வேறா? ‘இப்ப நடக்கறதை மட்டும் கவனி’ என்று இவர் அலட்டல் நடை நடந்து போய், போன வினாடியிலேயே அப்பளமாகி திரும்புவதெல்லாம் கலகலப்பு காக்டெயில்.

நேற்று வந்த நஸ்ரியாவுக்கு கூட சவால் விடுகிறது நயன்தாராவின் அழகு. அவ்வளவு கலகலப்பான நயன்தாரா, அதற்கப்புறம் இடிச்சப்புளி செல்வராஜ் ஆவதெல்லாம் விதியின் விளையாட்டு என்கிற மாதிரியே போகிறது கதையும். பிற்பாடு நயன்தாராவின் சிரிப்பை காண்பதற்கு, நாலைந்து ரீல்கள்களாவது தவம் கிடக்க வேண்டியிருக்கிறது. அப்பா சத்யராஜை ‘டார்லிங்’ என்று செல்லம் கொஞ்சி, அவருக்கு பீர் வாங்கிக் கொடுத்து தமிழுலகத்திற்கு ஒரு புது டைப் மகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் நயன். உடனிருக்கும் தோழியை நயன்தாரா மச்சி என்று அழைக்கும்போதெல்லாம் மண்டைக்குள் ஜில்லென என்னவோ பண்ணுகிறது. எல்லாம் சரி, இவருக்கு ஃபிட்ஸ் வரும் அந்த காட்சியில் நயன்தாராவை பார்க்க மனதில் தில் வேணும் சாமீய்…

ஜெய்யும் சத்யனும் ஒரு செட் என்றால், ஆர்யாவும் சந்தானமும் ஒரு செட். நயன்தாராவை வெறுப்பேற்றுவதற்காகவே தினம் தினம் குடித்துவிட்டு அபார்ட்மென்ட் வரும் ஆர்யா, ஒரு முறை வெளியிலேயே படுத்து அங்கேயே உச்சா போவதெல்லாம் டூ மச் அட்ராசிட்டி. நயன்தாராவிடம் ஒரு அபார்ட்மென்ட்டே கத்தி ஓய்ந்தபின் ஒரு நாய் மட்டும் உள்ளே வந்து கைய்முய் என்று முழங்கிவிட்டு போகிறது. இப்படி ரசனையான ஜோக்குகள்தான் படமெங்கும்….

செம மேன்லியாக உலாத்தும் ஆர்யா, ஒருகட்டத்தில் உடைந்து கன்னம் வழிய அழுகிற சீன்கள் உலுக்கி எடுக்கிறதென்றால், இவரும் நஸ்ரியாவும் அடிக்கிற ரகளைகள் வேறொரு டைப்பாக உலுக்கி எடுக்கிறது நம்மை. அதிலும் நஸ்ரியாவின் அறிமுகக் காட்சி இருக்கிறதே, அந்த ஒரு காட்சிக்காகவே டிக்கெட்டுகள் விற்று தீர்கிற அதிர்ஷ்டமும் நடக்கலாம்.

பஜனை என்கிற வார்த்தையை கெடுத்திருக்கிறது தமிழ்சினிமா. குட்மார்னிங் என்கிற மரியாதையை கெடுத்திருக்கிறது தமிழ்சினிமா. இந்த படத்தில் மாட்டிக் கொண்ட வார்த்தை ‘பிரதர்’. ஆர்யாவை காதலிக்க ஆரம்பித்த பிறகும் கூட கொஞ்சம் குழைவாக ‘பிரதர் ’ என்று நஸ்ரியா அழைக்கிறார் அவரை. இனி ‘பிரதர் ’ என்றால் சொன்னவளின் பின்னாலேயே செல்லக் கூடிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் இளைஞர்கள்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு வேறொரு பாடி லாங்குவேஜ் சந்தானத்தை பார்க்க முடிகிறது இதில். மகுடியாக இருந்தாலும் ஊதுகிறவர் ஊதினால்தான் சத்தமே வரும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். (முந்தைய யா யாவை ஏன்-யா இங்கே இழுக்கிறே என்று கேட்கிற அதிகாரம் சந்தானத்திற்கே இல்லை)

இந்த கதைக்கு சத்யராஜ் தேவையில்லைதான். ஆனால் அவரால் மேலும் பளிச் ஆகியிருக்கிறது அந்த அப்பா கேரக்டர்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் சில பாடல்கள் மட்டும் ரசிக்க முடிகிறது. பின்னணி இசை மிக நேர்த்தி.

படத்தில் காமெடியை பொங்க பொங்க காய்ச்சும் அட்லீக்கு, மனதை பிசையும் சென்ட்டிமென்ட் வசனங்களும் கை கூடி வருவது சிறப்பு. நமக்கு புடிச்சவங்க இல்லாம போயிட்டா வாழ்க்கை அதோட முடிஞ்சுடறதில்ல. என்று அவநம்பிக்கைக்கு வேப்பிலை அடிக்கும் வசனங்கள், பலருக்கு ஜாக்கியாக இருந்து மேலேற்றும். இவ்வளவு கலகலப்பாகவும் கமர்ஷியலாகவும் கதை சொல்ல தெரிந்த அட்லீ, ரசிகர்களை யூகிக்க விடாமல் திணறடிக்கிற வித்தை மட்டும் தெரியாமல் தடுமாறியிருப்பதையும் சொல்லியாக வேண்டும்.

ராஜா ராணி – ரசனை ஏணி…!

-ஆர்.எஸ்.அந்தணன்

7 Comments
 1. admin says

  Tamilmagan Max சூப்பர் அந்தணன். சான்ஸே இல்லை
  5 hours ago · Like · 1

  Varadarajan Padmanabhan Good nalla review,keep it up…
  about an hour ago via mobile · Like

 2. admin says

  வணக்கம் அந்தணன்,

  சும்மா எதாவது எழுதி நல்ல இயக்குனர்களை சாகடிக்காமல். நேர்மையாக எழுதும் உங்கள் துணிவையும், ஆற்றலையும் எப்போதும் மதிக்கிறேன் & ரசிக்கிறேன்.

  இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். இந்தக் காலத்துக்கு தேவையான படைப்பு.

  என்றும் நட்புடன்
  வசீகரன்.

 3. Ramesh says

  unmayana vimarsanam thodarattum uingal pani. Ungal,ezuthkku nan adimai.

 4. bypeNobreq583 says

  You will have to place a toaster ovens exercise ball in your baseball glove moreover bring keep in mind this flat when you finish engaging in find probably marriage ceremony quest. An absolute toaster could be toaster oven reviews disconnected while not available, and youngsters really should not capable of head toaster oven reviews they.

 5. ugg outlet online says

  Can you tell us more about this? I’d want to find out more details.

 6. Cheap Oakley Sunglasses says

  I am actually happy to read this webpage posts which consists of tons of valuable facts, thanks for providing these kinds of data.

 7. Longchamp Pliage Cuir says

  Haha I heard about it, but never tried, thx.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஞானக்கிறுக்கன் பாடல் வெளியீட்டு விழா படங்கள்

[nggallery id=11]

Close