ராமராஜன் என்ற டவர் கோபுரம்… – வாழ்த்தி கவுரவித்த அமைப்பு

தமிழ்சினிமா என்ற கம்பீரமான குதிரையில் அமர்ந்து சில வருடங்கள் ராஜா மாதிரி சவாரி செய்தவர் ராமராஜன். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கொஞ்சம் கூட சளைக்காமல் சவால் விட்டு கலெக்ஷனை அள்ளியது அவரது படங்கள்! கரகாட்டக்காரன் 485 நாட்கள் ஓடி விநியோகஸ்தர்களின் கல்லா பெட்டியை ஒரு மினி ரிசர்வ் பேங்க் ஆக்கிய விஷயத்தை அவ்வளவு எளிதில் யாராலும் வரலாற்றில் இருந்து அழித்துவிட முடியாது.

காலம் ஆடிய கோர தாண்டவத்தில் ராமராஜன் என்ற டவர் கோபுரம் சற்றே நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது. இப்பவும் அவரை குணச்சித்திர வேடத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால் தன்னம்பிக்கையோடு எதற்காகவோ காத்திருக்கிறார் ராமராஜன்.

அவரது நம்பிக்கைக்கு ஒரு சின்ன ஊட்டச்சத்து தருவதை போல பாண்டிச்சேரியில் இயங்கி வரும் ‘அசிஸ்ட் வேல்டு ரிக்கார்ட் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்திருக்கிறது. அமைப்பின் தலைவர் ஆர்.ராஜேந்திரன் ராமராஜனுக்கு விருதும் பாராட்டு பத்திரமும் வழங்கி கவுரவித்திருக்கிறார்.

அவர் இதற்கப்புறமாவது இழந்த பெருமைகளை மீட்க வேண்டும். அதுதான் நமது ஆசை.

Ramarajan receives Achievement Award from World Record Foundation

Ramarajan, an yesteryear actor, was a phenomenon, in his heydays. His films used to give stiff competition to all the films including the popular actors of that era. His Karagattakkaran ran for over 485 days and minted money for its makers. For all the name and fame, he should have lived like a prince. But destiny has decided otherwise, and now Ramarajan leads a normal life like any of us. Though there have been offers coming his way to do character roles in films, he had not accepted any, probably for some reason. Now Assist World Record Foundation from Puduchery, has recognised his contribution to the Arts and Culture through Cinema, and have awarded him “Achievement Award”. This should do him a world of good now, as we wish him to don the grease paint once again and entertain all of us.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘தெனாலிராமன்’ தலைப்பை மாத்துங்க… – வடிவேலு உத்தரவு

அரை மைண்ட் ஆசாமிகளாக இருந்தால் சுத்தம். தெனாலிராமன் டைட்டிலுக்கு முன் வரும் கஜபுஜ புஜபல என்பதையெல்லாம் மனப்பாடம் பண்ணவே ஆறு மாசம் ஒரு வருஷம் பிடிக்கும். இதையெல்லாம்...

Close