ராவண தேசம் படத்திற்கு U/A சர்டிபிகேட்! – எப்படி எப்படி கிடைச்சது எப்படி?
விடுதலைப்புலிகளின் இலச்சினையோடு (logo) படத்தில் ஒரு காட்சி வந்தால், அதுவும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தோற்றத்தில் ஒருவர் நின்று கொண்டு அந்த இலச்சினைக்கு முன் வசனம் பேசினால், விடுவார்களா இங்கே? அதற்கெனவே சாணை பிடிக்கப்பட்ட ராட்சத கத்தியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட மாட்டார்களா சென்சார் போர்டு அதிகாரிகள்? ஆனால் காதும் காதும் வைத்தாற் போல ஒரு படத்தை பார்த்து அதற்கு U/A சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்?
படத்தின் பெயர் ‘ராவண தேசம்’. அஜய் நுத்தகி என்ற இளைஞர் படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தும் இருக்கிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அதிமுக வின் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் வந்திருந்தார். என்னை இந்த விழாவுக்கு அழைக்கும்போதே நான் அஞ்சினேன். ஏனென்றால் இலங்கை விவாகாரத்தில் அம்மா ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள். அதற்கு எதிரான கருத்தோடு படம் எடுக்கப்பட்டிருந்தால் அந்த விழாவில் நான் கலந்து கொள்வது பொருத்தமாக இருக்காதே என்பதால்தான் அந்த தயக்கம். அதனால் டைரக்டரிடம் கதை சுருக்கத்தை சொல்லும்படி கேட்டேன். உயிருக்கு அஞ்சி இலங்கையிலிருந்து தப்பி வரும் மக்கள் நடுக்கடலில் எந்த அளவுக்கு துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதையாம்.
சட்டமன்றத்திலேயே இலங்கை அரசுக்கு எதிராகவும், ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் தீர்மானம் போட்டவர் தமிழக முதல்வர் அம்மா என்ற கலைராஜன் அந்த நிகழ்ச்சியை கிட்டதட்ட அதிமுக மேடையாக்கினார்.
அடிப்படையில் தெலுங்கு இனத்தை சேர்ந்த அஜய் நுத்தகி, தமிழனின் வாழ்வா சாவா போராட்டத்தை பதிவு செய்திருக்கிறார் என்பதே ஒரு புறம் மகிழ்ச்சியை தருகிறது. இருந்தாலும், படம் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்…
பின் குறிப்பு- இலங்கை அகதிகள் படகில் தப்பி வரும் இந்த கடல் காட்சியை சுமார் அறுபது நாட்கள் கடலிலேயே இருந்து படமாக்கியிருக்கிறார்கள். நல்லவேளை, மீனவர்கள் என்று நினைத்து இலங்கை ராணுவம் இவர்களை அள்ளிக் கொண்டு போகவில்லை, அதுவரை சுபம்!
Ajay Nukkathi’s Ravana Desam receives U/A certification
Ajay Nukkathi who has produced and acted in his film Ravana Deasam, has received U/A certfication from censors. Though it is surprising, Censors who normally object to anything that is connected to Liberation Tigers, have given the nod, despite the fact that LTTE logo and a look-alike of Prabhakaran was shown in the film. AIADMK MLA Kalairajan who chaired the audio release of the film said he gave his consent only after listening to the story of the film, which dwelt on the sufferings of Tamils who undertook hazarduous journey to escape from the clutches of a war, to save their lives. Ajay Nukathi a Telugu by birth, has brought to light the sufferings of Tamil, is a welcome one, indeed. He said he and his crew and actors spent nearly 60 days in deep sea shooting for the film. One has to wait to watch the film, how it has brought out the lives of Srilankan Tamils.