ரெயிலில் காத்திருப்போர் பட்டியலுக்கு சீட் கிடைத்தால் எஸ்.எம்.எஸ். வரும்
ரெயில் பயணத்திற்கு டிக்கெட் ரிசர்வ் செய்தவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், இனி ரெயில்வே துறை தொலைபேசி எண் 139 மற்றும் அதன் வலைதளத்திலேயோ சென்று அவர்களுக்கு பெர்த் கிடைத்துள்ளதா என அறிந்துகொள்ள வேண்டியதில்லை.
காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டிற்கு சீட் கிடைத்தால் இனி ரெயில்வே துறை சார்பில் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இன்று முதல் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை இணை அமைச்சரான அதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்தார்.
இதன் மூலம் நாள் ஓன்றுக்கு 4 லட்சம் பயணிகள் பயன் பெறுவார்கள் என ரெயில்வே துறை அறிவித்துள்ளது. ரெயில்வே துறையின் தொழில்நுட்பகரமான க்ரிஸ் இந்த மென்பொருளை வடிவமைத்துள்ளது. இந்த சேவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.