லவ்வரை பிரதர்னு கூப்பிட்டா தப்பில்ல… -ஆர்யா அதிரடி பதில்

ராஜா ராணி படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடந்தது. வழக்கம்போல நயன்தாரா, சந்தானம் ஆகியோர் பிரஸ்சை சந்திக்க அஞ்சி வீட்டிலிருந்தபடியே பிரஸ்மீட்டுக்கு ஆசி வழங்க, மொத்த பாரத்தையும் தானே சுமக்கும் மாவீரனாக பேச ஆரம்பித்தார் ஆர்யா.

இந்த படம் ஆரம்பிக்கும்போதே ஹிட்டுங்கறதுக்கான எல்லா அறிகுறியும் தென்பட ஆரம்பிச்சுது. இப்போ எல்லா இடத்திலேயும் படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்கு. இந்த நேரத்துல நான் டைரக்டர் அட்லீக்கு நன்றி சொல்லிக்கிறேன் என்றார். அட்லீ உள்ளிட்ட மற்றவர்கள் பேசி முடித்ததும், ‘ஆர்யாவிடம் சில கேள்விகள்’ என்று ஆரம்பித்தது முழக்கம்.

வீட்ல பொண்ணு பார்க்குறாங்களாமே? இப்படி ஒரு கேள்வியை அவரும் எதிர்பார்த்திருப்பார் போலிருக்கிறது. அப்படியெல்லாம் இல்லீங்க. பத்திரிகைகளில்தான் அப்படியெல்லாம் செய்தி வருது. நானும்தான் எனக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கேன். வீட்லயும் பார்க்குறாங்க. நல்ல பொண்ணு வந்ததும் நானே சொல்றேன் என்று அதோடு அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அடுத்த கேள்வியை எதிர்நோக்கினார்.

இந்த படத்துல லவ்வரை ‘பிரதர்’னு அந்த பொண்ணு கூப்புடுது. அது சரியா? நீங்க அதை ஏத்துக்குறீங்களா?

அதுல ஒண்ணும் தப்பு இல்ல. செல்லமா கூப்பிடுறதனால் அது கரெக்ட்தான் என்றார் ஆர்யா.

‘ஆர்யா நயன்தாரா வெட்டிங்’குன்னு ஒரு புரளியை நான்தான் கிளப்பி விட்டேன். படத்துல அவங்க ரெண்டு பேரும் தம்பதிகளா நடிக்கறதால அப்படி செஞ்சேன். அதுல தப்பு இல்லேன்னு தோணுது. அதனால் அவங்க காதல் பற்றி எந்த கேள்வி கேட்டாலும் அதுக்கு நான் பொறுப்பு. ஆனால் ஜெய் நஸ்ரியாவை லவ் பண்றாரேன்னு எங்கிட்ட கேட்டா நான் எப்படி பதில் சொல்ல முடியும் என்று வலையில் தப்பிய மீனாக நழுவினார்.

இந்த படம் மவுனராகம் படத்தின் சாயலில் இருக்கே? இந்த கேள்விக்கும் கொஞ்சம் கூட அசரவில்லை அட்லீ. எங்க பேமிலிக்கு நெருக்கமானவங்க வீட்ல நடந்த சம்பவத்தைதான் நான் கதையா எழுதினேன். ஆனால் இந்த படம் மணிரத்னம் சார் படத்தோட கம்பேர் பண்ணி பேசுற அளவுக்கு இருக்குன்னா அது எனக்கு பெருமைதான் என்றார்.

இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?

Read previous post:
நடிகை ஐஸ்வர்யா புகைப்படங்கள்

[nggallery id=14]

Close