லவ்வர் டேவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் குஷ்பு குமுறல்

காதலர் தினத்தை கண்டு பிடித்தவன் கையில் கிடைத்தால் அவனை பொடிமாஸ் ஆக்கிவிடவும் தயங்காத கட்சிகள் வடக்கில் உண்டு. முக்கியமாக சிவசேனா. அந்த நாளில் கையில் கட்டையோடு திரியும் தொண்டர்கள் (குண்டர்கள்) எங்காவது காதல் ஜோடிகளை கண்டால் நையப்புடைத்து நாக்கு தள்ள வைத்துவிடுவார்கள். அப்படியிருந்தும் வருடா வருடம் இவர்களிடம் அடிவாங்கி அவமானப்படும் காதல் ஜோடிகள் பெருகிக் கொண்டே போவதுதான் சோகம்.

அந்த வடக்கு குண்டாஸ் தெற்கேயும் தனது அதிரடி வேகத்தை அறிமுகப்படுத்தி வைக்க, இங்கேயும் அதுபோன்ற மிரட்டல்கள் உருட்டல்கள் காதலர்களை கண்ணை கசக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது. தேவையா இதெல்லாம்? என்னாத்துக்கு லவ்வு? என்னாத்துக்கு அதுக்கொரு டே? என்றெல்லாம் அலுத்துக் கொள்ளும் பொதுமக்களுக்கு மத்தியில் எப்போதும் போல்டாக குரல் கொடுப்பவர் குஷ்புதான். இதோ- காதலர் தினம் நெருங்கும் நாள். என்ன சொல்லப் போகிறார் குஷ்பு.

தவறுகள் அன்னைக்கு மட்டும்தான் நடக்குதா? நாட்டில் பல இடங்களில் கற்பழிப்புகள் நடக்குதே? அதை எதிர்த்து போராடுறாங்களா? இவங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க. ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவங்க மாதிரி எனக்கு தெரியுது என்று கூறியிருக்கிறார்.

காதலர்களை விட்டுட்டு குஷ்புவை நோக்கி குண்டாந்தடியை ஏவி விட்ற போறாங்க. ஜாக்கிரதை மேம்…!

Those who oppose Valentine’s Day are mentally unstable – Kushbu

The opposition to Valentine’s Day which was originated in north has established the base in the south too. It is a ritual that happens on every Valentine’s Day, beating and harassing the young lovers. This year is no different. But kudos to the young lovers they dared those who oppose them by walking out together in open on this particular day.

Kushbu is one actress who always speak her mind. When quizzed about the opposition to the Valentine’s Day, she said that those who oppose this day are mentally unsteady. “Why not they protest against rapes and molestation happening in the country?” she questioned. These anti social elements have no job other than create nuisance to the public, she opined.

3 Comments
  1. andrew says

  2. mohamed kasim says

    “காதலர் தினம் ” கொண்டாடுபவர்களிடமும்…
    காதலிப்பவர்களிடமும் சில கேள்விகள்…!

    * உங்கள் சகோதரியை ஒருவன் காதல் என்ற பெயரில் விபச்சாரம் செய்தால் ……..
    நீங்கள் அனுமதிப்பீர்களா..?

    * உங்கள் மகள், உங்கள் உறவுக்காகார பெண்களிடம் ஒருவன் காதல் என்ற பெயரில் விபச்சாரம் செய்தால் ……..
    நீங்கள் அனுமதிப்பீர்களா…?

    * காதல் என்ற பெயரில் உங்கள் குடும்பப் பெண்களை….. பார்க்,பீச், சினிமா,ஹோட்டல் இன்னும் இதுபோன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றால் …….
    அதை நீங்கள் அனுமதிப்பீர்களா..?

    * காதல் என்ற பெயரில்- உங்கள் குடும்ப பெண்களிடம் ஒருவன் “காதல் பொருட்களை வாங்கி கொடுத்தால் ….. அதை நீங்கள் அனுமதிப்பீர்களா…?

    * காதல் என்ற பெயரில்- உங்கள் குடும்பப் பெண்களிடம் ஒருவன் கொஞ்சி குழாவினால்….
    அதை நீங்கள் அனுமதிப்பீர்களா..?

    அனுமதிக்கமாட்டீர்கள் தானே…?????

    அதேபோன்றுதானே….
    நீங்கள் காதலிக்கும் பெண்…

    ஒருவனின் சகோதரியாய்….
    ஒருவனின் மகளாய்…
    ஒருவனின் உறவுக்கார பெண்ணாய் இருப்பாள்…

    நீங்கள் உங்க குடும்பத்துக்கு மேற்கண்ட விஷயத்தை விரும்பாதது போலதானே … அவர்களும் தாங்கள் குடும்ப பெண்களுக்கு “காதல் என்ற பெயரில் நடக்கும் அசிங்கத்தை விரும்ப மாட்டார்கள்…????

    நபி ஸல் அவர்களிடம் ஒருவர் “தான் விபச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டு வரும்போது…. மேற்கண்ட கேள்விகளைத் தான் நபி ஸல் அவர்கள் கேட்டு, அவருக்கு புரிய வைத்தார்கள்… என்று ஹதீஸ் சொல்கிறது…!
    http://quranmalar.blogspot.in/2013/02/blog-post_12.html

  3. mohamed kasim says

    காதல் என்றவுடன் இளகும் மனது பெரும்பாலோருக்கும் உண்டு. அதனால்தான் சினிமா நாடகங்கள் ஊடகங்கள் போன்றவை காதலோடு காமத்தையும் கலந்து காட்டி மக்களின் நேரத்தையும் செல்வத்தையும் கறப்பதோடு பெரும் கலாச்சார சீரழிவையும் சமூகத்தில் பரப்புகிறார்கள். சமூகத்தில் குடும்ப உறவு முறிவுகள், அனாதைகள் மற்றும் தந்தைகள் இல்லாத குழந்தைகள் உருவாக வழிவகுக்கிறார்கள்.
    இப்போக்கு சரியா அல்லது தவறா என்பதை நாமே முடிவு செய்ய கீழ்கண்ட கேள்விகளை நமக்கு நாமே கேட்டுப் பார்ப்போமே!
    = நம் தங்கையையோ அக்காவையோ ஒருவன் காதல் என்ற பெயரில் விபச்சாரம் செய்தால் …….. நாம் அனுமதிப்போமா?
    = நம் மகள் அல்லது நம் உறவுக்காகார பெண்களிடம் ஒருவன் காதல் என்ற பெயரில் விபச்சாரம் செய்தால் …….. நாம் அனுமதிப்போமா?
    = காதல் என்ற பெயரில் நம் குடும்பப் பெண்களை….. பார்க்,பீச், சினிமா,ஹோட்டல் இன்னும் இதுபோன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றால் ……. அதை நாம் அனுமதிப்போமா?
    = காதல் என்ற பெயரில்- நம் குடும்ப பெண்களிடம் ஒருவன் பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்தால் ….. அதை நாம் அனுமதிப்போமா?
    = காதல் என்ற பெயரில்- நம் குடும்பப் பெண்களிடம் ஒருவன் கொஞ்சி குலாவினால்…. அதை நாம் அனுமதிப்போமா..?
    = நமது தாயாரிடம் அல்லது தந்தையிடம் யாரேனும் இவ்வாறு நடந்து கொண்டால்….. சிந்திக்கவே அருவருப்பாக இருக்கிறதல்லவா?

    இப்போது காதல் என்ற இவ்விபரீதத்தில் ஈடுபடுவோரிடமும் அதை ஊக்குவிப்போரிடமும் நாம் சொல்ல விரும்புவது இதுதான்…..
    நீங்கள் காதலிக்கும் பெண்…
    ஒருவனின் சகோதரியாய்….
    ஒருவனின் மகளாய்…
    ஒருவனின் தாயாக அல்லது
    ஒருவனின் உறவுக்கார பெண்ணாய் இருப்பாள்… http://quranmalar.blogspot.in/2014/02/blog-post_13.html

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்த நெருக்கடியில விஸ்வரூபத்தை வேற வாங்கணுமா? ஷங்கர் கொந்தளிப்பு

மகா மெகா பட்ஜெட் படங்கள் பேங்க் பேலன்சை மட்டுமல்ல, சமயங்களில் ரத்தத்தையும் உறிஞ்சி எடுத்துவிடும். படம் வெளியானால் வட்டியும் முதலுமாக லாபம் கிடைத்தாலும் அதை உருவாக்கி வெளியிடுவதற்குள்...

Close