லிங்குசாமி தயாரிப்பில் மீண்டும் பாலாஜி சக்திவேல்! இந்த முறையும் புதுமுகங்கள்தானாம்…

வழக்கு எண் 18/9 படம் மட்டுமல்ல, பாலாஜி சக்திவேலின் முந்தைய படங்களும் தமிழ்சினிமாவின் தர வரிசையில் ISI அழகுக்கு உரியவை. வழக்கு எண் படத்திற்கு மீடியா கொடுத்த விமர்சனங்களுக்காக சற்று அதிகமாகவே நெகிழ்ந்து போன பாலாஜி சக்திவேல், விமர்சகர்களின் காலில் விழுந்து தன் நன்றியை தெரிவித்தார். தமிழ்சினிமாவின் அழிக்க முடியாத அடையாளங்களில் ஒருவரான இவரை பார்த்தால்தானே ‘அடுத்த படம் எப்ப சார் என்று கேட்க முடியும்?’ ஆனால் எங்கோ ஒரு மூலையில் தன் அடுத்த படத்திற்காக இயங்கிக் கொண்டிருந்த பாலாஜி சக்திவேல், தனது புதிய கதையை பொலிவாக உருவாக்கி முடித்துவிட்டு அதை லிங்குசாமியிடம் கூறினாராம்.

இந்த படத்தை நாமே தயாரிக்கலாம் என்று அவர் கூறியதை தொடர்ந்து ஒரு சுபயோக சுபநாளில் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாக கேள்வி. வழக்கம் போல முன்னணி நடிகர் நடிகைகளின் வாசலில் வாட்ச் மேன் வேலை பார்த்து கால்ஷீட் வாங்க பிடிக்காமல் இந்த முறையும் புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறாராம்.

அதிஷ்டத்தை தேடி அலைகிற புதுமுகங்கள், கொஞ்சம் லிங்குசாமி ஆபிஸ் பக்கமாக வாக்கிங் போனால் பாலாஜி சக்திவேலின் கண்களில் படலாம். உங்கள் வாழ்க்கையே கூட திசை மாறலாம்…

Lingusamy to produce Balaji Sakthivel’s next film

Balaji Sakthivel is a man of integrity, as otherwise, why should he not opt for any other producer other than Lingusamy. Balaji Sakthivel who gave critically acclaimed as well as Festival Awarded film, Vazhakku Enn 18/9, has readied his script for his next film. Having associated with Lingusamy for his maiden venture, he went to him and narrated the story. Impressed, Lingusamy, immediately gave the nod to produce the film. It is heard that Balaji Sakthivel, this time too, prefers to rope in new faces instead of known or popular heroes, in his films.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்… கிழவி சங்கலிக்கு பாலிஷ் போடு’

‘கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்... கிழவி சங்கலிக்கு பாலிஷ் போடு’ கதையாகிவிட்டது மயிலு ஸ்ரீதேவியின் மயக்க வித்தை. பல்லாண்டுகளுக்கு முன் தனது மூக்கை சின்னதாக்கிக் கொண்டவர், இப்போது தனது முன்னழகை...

Close