லெஜன்டுகளின் விழாவில் ‘ லெக் ’பீஸ்களின் தொல்லை!

‘ஒரு ஊர்ல’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். பொதுவாக பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்ளும் வழக்கம் அவருக்கு இல்லை. ஆனால் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அதுவே படக்குழுவினருக்கு பெரிய லாட்டரி அடித்தது போன்ற சந்தோஷத்தை கொடுக்க, நிஜமாகவே நினைவில் வைத்திருக்கிற அளவுக்கு ஒரு நினைவுப்பரிசை அளித்தார்கள் அவருக்கு. இளையராஜாவும், அவரது தாய் சின்னத்தாயும் இருப்பது போன்ற ஒரு சிலையை வழங்கினார்கள். அதற்கப்புறம் குரூப் போட்டோ.

அங்குதான் அந்த அநியாயம்… படத்தின் நாயகி நிஷா பாண்டே, ஒரு அரைக்கால் சட்டையும் அதற்கு மேட்சாக ஒரு பனியனும் அணிந்து கொண்டு வந்திருந்தார். அந்த குட்டை கால்சட்டையுடன் அவர் ஓடிவந்து இளையராஜாவின் காலில் விழ… ஒரு நிமிடம் ஆடிப்போனார்கள் வந்திருந்த ரசிகர்கள். நல்லவேளை… அதையெல்லாம் பெரிதுபடுத்தாத ராஜா, இரு கைகளாலும் அவரை ஆசிர்வதித்துவிட்டு அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டார். (லெஜன்டுகள் கலந்து கொள்ளும் விழாக்களில் இப்படி வரும் லெக்பீஸ்களை என்னவென்று கடிந்து கொள்வது?)

அதற்கப்புறம் ஜால்ரா நேரம். இசைஞானி இளையராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றாலும், ஒரே மாதிரி பாராட்டுகளை கேட்க நமக்கே முடியவில்லையே. அவர் எப்படி தாங்கிக் கொள்கிறாரோ? கவிஞர் மு.மேத்தாவுக்கு வெகுகாலம் கழித்து மைக் கிடைக்கிறது போலும். பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒன்றை மூச்சிரைக்க வாசித்துக் கொண்டிருந்தார். சஞ்சீவி பர்வத மலை பற்றியெல்லாம் அவர் பேசிக் கொண்டிருக்க, அந்த தியேட்டரே ஆவ் என்று வாய் பிளந்து வருந்திக் கொண்டிருந்தது. (காலம் மாறிப்போச்சு கவிஞரே… ஊரோடு ஒட்டி வாழுங்க, இல்லேன்னா ஊரை விட்டு தள்ளி வாழுங்க) கவிஞர் வாலி தன்னை சுற்றி ஷங்கர் போன்ற இளம் இயக்குனர்களை வைத்துக் கொண்டார். அதனால்தான் அவரது எழுத்துக்களும் இளமையுடன் இருந்தது. இசைஞானி தன்னை சுற்றி பழம்பெருச்சாளிகளை வைத்திருப்பதை விட்டொழிப்பது நல்லதாக படுகிறது நமக்கு.

இந்த விழாவில் இளையராஜாவின் பேச்சு வழக்கம்போல அசத்தல். இந்த படத்துக்கு இரண்டே நாளில் எல்லா பாடல்களையும் உருவாக்கி ரீரெக்கார்டிங்கையும் முடிச்சு கொடுத்துட்டேன் என்று அவர் சொன்னது வியப்பு. அப்படியே இன்னொரு சலுகையாக இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். நான் அப்போதிருந்தே புதுமுக இயக்குனர்கள் படங்களுக்கு நிறைய இசையமைச்சு கொடுத்திருக்கேன் என்றவர், இளைஞர்களே வாருங்கள். உங்களுக்கு நான் இருக்கேன் என்று கூற பலத்த கைத்தட்டல்.

Oru Oorlae audio launched

The audio launch of Oru Oorlae was a grand affair as Isaignani Ilayaraja, who normally does not participate in such events, has graced the occasion, which itself made it a grand one. The cast and crew of the film were present in full strength with Producers’ Council President Kayaar. However there was mild misconduct that would have certainly hurt Ilayaraja, though he did not make it an issue. Nisha Pandey the heroine of the film fell at the feet of Ilayaraja to take his blessing which is certainly a good habit, but her costume – a short and a T- shirt – was an eye sore. Ilayaraja blessed the girl without noticing her costume. It is better if leading artistes are advised to attend such events in decent wear, when veterans are present. We hope the concerned persons would brief their artistes accordingly.

As usual the occasion was singing praises of the legendary music composer and every one vied with each other for recognition. The composer while speaking revealed that he had composed all the songs for the film, as well as its re-recording, in just two days time. While praising the younger generation film makers for their talent, he surprised them saying that he is always available for them.

1 Comment
  1. subramaniya shiva. says

    arumai…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாக்யராஜுக்கு ஏனிந்த வேலை?

கைய புடிச்சு இழுத்தாரு.... என்று காங்கிரஸ் எம்பி யின் மானத்தை இன்ஸ்ட்டால்மென்ட்டில் ஏலம் போட்ட ஸ்வேதா மேனனை யாருக்கும் தெரியாமலிருக்காது. இத்தனைக்கும் ஸ்வேதாவுக்கு இருக்கும் இமேஜ் தகர...

Close