லொள்ளுசபா பாலாஜி காலமானார்

உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி.

இதனால் இவர் லொள்ளு சபா பாலாஜி என்று அழைக்கப்பட்டார். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு காமெடி வசனம் இவர் தான் எழுதினார் சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த பாலாஜி, அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது.

அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி சிகிச்சைப் பலனின்றி காலை 8 மணி சுமாருக்கு உயிரிழந்தார். காலமான பாலாஜிக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். பிரபல காமெடி நடிகர் சந்தானத்தை டி.வி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியவர் பாலாஜி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Read previous post:
எக்ஸ்ட்ரா பணம் தந்தால்தான் குளிப்பேன் படப்பிடிப்பில் அடம் பிடித்த மோனிகா

மோனிகாவை குளிக்கவிட்ட படம் என்றால் அது ஹிட்டாகும் போலிருக்கிறது. இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய படம் சிலந்தி. படம் வெளியாகி பல மாதங்கள் விக்ஸ் கம்பெனியே வற்றிப் போகிற...

Close