லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க கருணாநிதி, அன்பழகனுக்கு அதிகாரம்!

லோக்சபா தேர்தலுக்கு திமுகவும் தயாராகிவிட்டது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி முடிவெடுக்க திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச்செயலர் க. அன்பழகன் ஆகியோருக்கு அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், – லோக்சபா தேர்தல் தொடர்பான கூட்டணி உள்ளிட்டவற்றை முடிவு செய்யும் அதிகாரம் திமுக தலைவர் கருணாநிதிக்கும் பொதுச்செயலர் அன்பழனுக்கும் வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. – சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலைக்கு மூடு விழா நடத்துவதற்கு எதிர்ப்பு – தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை மற்றும் சிங்கள மீனவர்களின் தாக்குதல்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். – தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பெண்கள், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் வாழக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதற்கு கண்டனம் – விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களில் தொடரும் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும். – ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பிரச்சனைகளுக்காக அறப்போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நல்லூர்க் கந்தனின் கொடியேற்றம்

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய கொடியேற்ற நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. அந்தண குருமார்களினால் வேத மந்திரங்கள் ஒலிக்க முருக பக்தர்களின்...

Close