வடிவேலுவுக்கு முப்பத்தியாறு பொண்டாட்டி…!

தெரிந்தோ, தெரியாமலோ புஜபல(ம்) என்று தெனாலிராமன் பட தலைப்பில் ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்சை சேர்த்திருக்கிறார் வடிவேலு. அவரது நினைவுத் திறன் பலத்தை பற்றிதான் கண்ணே பட்டுவிடுகிற அளவுக்கு பேசி வருகிறது அப்பட வட்டாரம். தற்போது படப்பிடிப்பு குற்றாலத்தின் அருகிலிருக்கும் காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. ஆனால் அதற்கு முன்பு அரண்மனை செட்டப்பில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியை பற்றிதான் விழுந்து விழுந்து பாராட்டி வருகிறார்கள்.

கதைப்படி வடிவேலுவுக்கு 36 மனைவிகளாம். மனைவியே முப்பத்தியாறு என்றால் பிள்ளைகள் எத்தனை பேர் இருப்பார்கள்? மொத்தம் 58 பேர்களாம். ஆச்சர்யம் இதில் இல்லை. இவர்கள் அத்தனை பேரது பெயர்களையும் ஒரே நேரத்தில் மூச்சு விடாமல் அவர் ஒப்பிக்கிற மாதிரி ஒரு காட்சி.

அவ்வளவு பெயர்களை ஏற்ற இறக்கத்தோடு ஒரே டேக்கில் பேசி முடித்தாராம் வடிவேலு. சுற்றியிருந்த அத்தனை பேரும் கைதட்டி மகிழ, ஒரு கம்பீர நடை நடந்து கேரவேனுக்குள் போனாராம் வடிவேலு.

உள்ளார போயி ஒரு மூச்சு சைலண்ட்டா இருமியிருப்பாரோ?

For English Users:

Vadivelu at his best for Thenaliraman

Vadivelu’s Thenaliraman is progresssing at a brisk pace and currently shooting is happening in a dense forest near Kutralam. Vadivelu has 36 wives in the film and 58 children. Recently Vadivelu enacted a scene in which he mouthed the names of the 58 children in one single shot, which made every member of the unit to talk very high about Vadivelu’s skills. Sources claim that Vadivelu has given his best for the film. Perhaps Vadivelu likes to be seen that he is more focussed on films than politics though elections are round the corner!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சீதாராம கல்யாணம் லங்கலோ படத்தில் ஹன்சிகா

[nggallery id=15]

Close