வடிவேலுவுக்கு வைண்ட் அப்! -சாட்டையை சுழற்றியதா சர்க்கார்?
‘அவரே மன்னிச்சுட்டேன்னு போயிட்டாரு, விட்ரா…’ என்று வடிவேலு அல்வா வாசுவிடம் கெஞ்சியதெல்லாம் அப்படியே நிஜத்திலும் நடப்பதுதான் டெரர்…. ஆனால் சீன்ல இருப்பது அல்வா வாசு இல்லை. அவரைவிட ஆபத்தான அரசியல் வாசுக்கள்தானாம்!
‘வடிவேலுவையே வைண்ட் அப் பண்ணுங்க’ என்கிறார்களாம் அவர்கள். வேறொன்றுமில்லை, இந்திய சினிமாவின் 100-வது ஆண்டு விழாவை சென்னையில் கொண்டாட திட்டமிட்டு வெகு கோலாகலமாக அதற்கான வேலையிலும் இறங்கிவிட்டது பிலிம்சேம்பர். மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இம்மாதம் 21 ந் தேதி துவங்குகிறது விழா. விழாவுக்கு இவருக்கு அழைப்பில்லை, அவருக்கு மரியாதை இல்லை என்றெல்லாம் குமுற ஆரம்பித்திருக்கும் சிலர், அந்த குமுறலை கூட, ரூம் போட்டு குமுறிவிட்டு சத்தமில்லாமல் நடையை கட்டி வருகிறார்கள். ஆணானப்பட்ட அவர்களுக்கே அந்த கதி என்றால், வடிவேலு தனக்கேயுரிய அவ்வ்வ்வ்வ்வ் சவுண்டோடு நடையை கட்ட வேண்டியதுதான் என்கிறார்கள் இந்த விழா தொடர்பாக தகவலை கசியவிடும் அன்பர்கள்.
விஷயத்தில் அதிகம் காரமில்லை. பட் நாக்கு நங்குங்குது. வேறொன்றுமில்லை. வடிவேலுவும், டி.பி.கஜேந்திரனும் இந்த விழாவில் ஒரு ஷோ பண்ணுவதாக இருந்தார்களாம். அதுவும் முதல்வர் முன்னிலையில். பிலிம்சேம்பர் கொடுத்த கலைநிகழ்ச்சி பட்டியலில் வடிவேலுவின் பெயரை பார்த்த சிலர், இப்படியெல்லாம் குரங்குக்கு கோவணம் கட்ற வேலையை வேணாம். கம்முன்னு இருங்க என்று கூறி, வடிவேலுவின் பெயரை அடித்தே விட்டார்களாம்.
ஒரு ஆறுதலுக்கு கூட கதற விடமாட்டேங்குறாங்களே… என்று தனிப்பட்ட முறையில் கதறிக் கொண்டிருக்கிறது வைகைப்புயல்.