வடிவேலு- சிங்கமுத்து சந்திப்பு! பிரிந்தவர் கூடினர். பேச்சும் இனித்தது…

நாலு எருது, ஒரு சிங்கம் கதையாகிப் போனோமே என்று கவலைப்பட்டும் கண்ணீர் சிந்தினால், தானாக அடுத்த கட்டத்தை நோக்கிதானே நகரும் மனசு?

காமெடியில் ராஜாவாக விளங்கிய வடிவேலு விட்ட நாலு சென்ட் கேப்பில் அரண்மனையே கட்டிவிட்டார்கள் ஆளாளுக்கு. அதிலும் சந்தானமும் சூரியும் கட்டிய அரண்மனையை அண்ணாந்து பார்த்து கிடுகிடுத்து போயிருக்கிறார்கள் வடிவேலுவுடன் கோஷ்டி கானம் பாடிய காமெடியன்கள். இதில் அதிகம் நொந்து போனது சிங்கமுத்துதான். வடிவேலுவுடன் இணைந்திருந்தபோது கிடைத்த கைத்தட்டல்களும் பண முடிப்புகளும், ஸோலோவாக கூத்தாடும்போது பாதிக்கும் குறைவானதுதான் மிச்சம். ஆரம்பத்தில் இவரை ஆதரித்த சந்தானம், சூரிகள் இப்போது இவரை சேர்ப்பதேயில்லை. இவரை மட்டுமா? வடிவேலுவுடன் இணைந்து ஒரு காலத்தில் பெருத்த வவுச்சர்களில் கையெழுத்து போட்டு வந்த இவர்கள் அதற்கப்புறம் கிழிந்த பேப்பர்களாகவும் மாறிப் போனார்கள்.

இதையெல்லாம் தனியாக உட்கார்ந்து சிந்தித்து பார்த்தாரோ என்னவோ? அண்மையில் மதுரைக்கு வந்திருந்த வடிவேலுவை அங்கு வேறொரு வேலையாக சென்றிருந்த சிங்கமுத்து வலிய சென்று பார்த்தாராம். நிலத்தை ஏமாற்றி விட்டார் என்றெல்லாம் கூப்பாடு போட்ட வடிவேலுவும் சிங்கமுத்துவை பார்த்ததும் நெகிழ்ந்து போனாராம். இருவரும் அமர்ந்து மணிக்கணக்காக பேசியிருக்கிறார்கள். நம்ம பண்ணியது தப்பு என்று இரண்டு பேருமே ஒரு முடிவுக்கு வந்தார்களாம். இனி இணைந்து செயல்படுவதாகவும் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். சிங்கமுத்து இப்போது அதிமுக பேச்சாளர் அல்லவா? நான் உங்களை அம்மாவிடம் அழைத்து செல்கிறேன் என்று வாக்குறுதியும் கொடுத்திருக்கிறாராம் வடிவேலுவுக்கு.

‘திரிசூலம்’ படத்தில் சிவாஜி அண் சிவாஜிகள் பாடுவார்கள். ‘இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே எதிர்காலம்’ என்று. இப்போது அப்படிதான் எண்ண தோன்றுகிறது.

Singamuthu met Vadivelu, to join hands once again!

Singamuthu and Vadivelu parted ways with lot of mud-slinging and abuses and it appeared they don’t meet again for ever. But destiny has other plans for them. During the fall out between them Santhanam and Soori enjoyed their outing to the core, laughing all the way to their banks. Perhaps this must have caused serious thought on both Vadivelu and Singamuthu who pondered over their fate and agony. It was Singamuthu who suffered most during the tussle by losing money as well as opportunities.

Recently Vadivelu visited his native Madurai. Singamuthu who happened to be there at that time, volunteered himself and met Vadivelu. Seeing Singamuthu Vadivelu too become emotional and they have spent lot of time discussing on various topics including about making a comeback together in the films, henceforth. They seemed to have chalked out strategies to counter the influence of present crop of comedians. Singamuthu who is a ruling party propagandist has assured Vadivelu that he would arrange a meeting with the party supremo.

Well! It is time both the actors realized their folly and amended their ways for betterment of their future. Hope the audience and Kollywood would give them great ovation as they had given them once.

2 Comments
  1. ghd gold says

    வடிவேலு- சிங்கமுத்து சந்திப்பு! பிரிந்தவர் கூடினர். பேச்சும் இனித்தது… – New Tamil Cinema – New Tamil Cinema okjiywjh ghd pas cher

  2. Chanel says

    They are perfect, quick shipment. Love them.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அரசியலுக்கு வருகிறார் அஜீத்? இது நாடாளுமன்ற அசைன்மென்ட்

கும்மியடிச்சு அம்மிய நகர்த்த முடியும்னு தோணல.... ஆனாலும் அஜீத்தை அரசியலுக்கு இழுக்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் சில முக்கியஸ்தர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் நேரடியாக இறங்கி...

Close