‘வடிவேலு வந்தா வுடமாட்டேன்…’ சிலுப்பும் சிங்கமுத்து மகன்

வடிவேலுவுக்கும் சிங்கமுத்துவுக்கும் ஏற்பட்ட சண்டையில் இருவருக்குமே சட்டை கிழிந்து சங்கடம் வழிந்த கதையை நாடே அறியும். நடுவில் ‘அம்மாவை பார்க்க வடிவேலு ட்ரை பண்றாராம்ல…’ என்று சிங்கமுத்துவிடம் கேட்டபோது, ‘அவரையெல்லாம் அம்மா பார்ப்பாங்களா? அவங்களுக்கு இருக்கிற வேலையில இதெல்லாமா முக்கியம்’ என்று சமாளித்தார் சிங்கமுத்து. ஆனால் அவரது கண்களில் தெரிந்தது கவலை.

இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும், ரெண்டு பேருக்கும் நடுவிலிருக்கிற பகை மறையாது போலிருக்கிறது. அற்புதமான ரெண்டு கலைஞர்கள் பிரிந்து போனது கலைக்கு நேர்ந்த நஷ்டமல்லவா? அப்பா சிங்கமுத்து அப்படியென்றால் அவரது மகன் வாசன் கார்த்தியும் அப்பாவை போலவே வடிவேலு மீது கோபம் காட்டுவதுதான் இந்த கவலையில் மேலும் கொஞ்சம் கவலையை சேர்க்கிறது.

இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘நாடோடி வம்சம்’. பழ.ராஜ்கண்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தைதான் வடிவேலுவின் ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் எப்போது திரைக்கு வருதோ, அந்த நேரத்தில் ரிலீஸ் பண்ணுங்க என்று கூறிவருகிறாராம் வாசன். இந்த பொல்லாத சபதத்திற்கு சிங்கமுத்துவும் ஆசி வழங்கியிருக்கிறாராம்.

வடிவேலு படத்திற்கு வாசன் கார்த்திக் படம் போட்டி என்பதையெல்லாம் கேட்பதற்கே கேணத்தனமாக இருந்தாலும், சபதம் சபதம்தானே?

நல்லா வருவீங்க…

Read previous post:
நைஜீரியாவில் மனித உடல்களுடன் திகில் வீடு கண்டுபிடிப்பு: பொதுமக்கள் முற்றுகை

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓயோ மாநிலத்தில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் உறுப்பினர்களில் சிலரைக் காணவில்லை என்றும் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையிடம்...

Close