வணங்குகிறோம் சமுத்திரக்கனி…

அண்மையில் ‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தின் அறிமுக விழா நடந்தது. படத்தின் ஹீரோ நானியும் டைரக்டர் சமுத்திரக்கனியும் நல்ல நண்பர்கள். எனவே இந்த விழாவில் கலந்து கொண்டார் அவர். அப்படி கலந்து கொண்டவர்களிடம் தங்கள் கல்யாண அனுபவங்களை கேட்டுக் கொண்டிருந்தார் தொகுப்பாளினி ரம்யா. அப்படிதான் சமுத்திரக்கனியிடமும் கேட்டார்கள். ஆனால் அவரது பதிலுக்குள் அப்படியொரு அனுபவமும் சோகம் ஒளிந்திருக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. கல்யாணத்துக்கு போனீங்கன்னா என்ன ஐட்டத்தை விரும்பி சாப்பிடுவீங்க? இதுதான் கேள்வி. அதற்கு பதிலளித்தார் சமுத்திரக்கனி.

நான் எந்த கல்யாணத்திலும் சாப்பிடுவதில்லை. காரணம்? நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கும்போது சில நேரங்களில் வேலை இருக்காது. படம் இருக்காது. அந்த நேரங்களில் கல்யாண வீடுகளுக்கு சமைக்கிற ஆட்களோடு கூலி வேலைக்கு போயிருக்கேன். எனக்கும் பூணுல் விபூதியெல்லாம் போட்டு அழைச்சிட்டு போவாங்க. வெங்காயம் அறியறது, சாம்பார் கலக்கறதுன்னு பல வேலைகளை செய்வேன். எப்ப கல்யாணத்துக்கு போனாலும் எனக்கு அந்த ஞாபகம் வந்துரும். அதனால் சாப்பிடுறதில்ல என்றார்.

இதை அந்த மேடையில் சொல்ல வெட்கப்படவோ, கூச்சப்படவோ இல்லை. எவ்வளவு சோதனைகளையும் தாங்கிக் கொள்கிற மனசிருந்தால் வெற்றி நிச்சயம் என்பதுதான் அவர் சொல்ல வந்த விஷயமாக இருந்திருக்கும்.

வணங்குகிறோம் சமுத்திரக்கனி…

Director Samudhrakani touches the heart in real life too!

Director Samudhrakani participated in the audio launch of Yash Raj Films Aaha Kalyanam, as he is the best friend of Nani, the hero of the film. When the anchor asked Samudhrakani if he has any experience to share on the wedding lunch or dinner he had in his life, Samudhrakani’s response was straight from the heart and it surely would have touched everyone’s heart, while many would have surprised at this plain talk.

He said that when he was working as an assistant director, on many days he would be without any work. During those days, he would go with catering contractor as a worker for doing ancillary jobs like cutting onions and vegetables, mixing Sambar and some other jobs that do not need any expertise. So whenever he visits any wedding and go for lunch or dinner, the days he had worked in marriages will come to his mind. So he avoided taking food at weddings he said.

Samudhrakani need not have narrated the happenings and could have given some other excuse. But by telling them explicitly he made sure two things – one he is not a pretender and always speak from his heart, and the other he wants to tell those who feel vexed at the disappointment of not making it big in any field, to have patience while undergoing pains, as success will reach them one day for sure.

Hats off to you Sir!!!

3 Comments
  1. Ghazali says

    அருமையான செய்தி, அருமையான பதிவு! தன் ஒவ்வொரு செய்கையிலும் மனதில் மேலும் மேலும் உயர்கிறார் சமுத்திரக்கனி.

  2. Anantharaman says

    Thiru Kani sir Unga Nermai enakku Pidichurukku

  3. ananthvenkat says

    heats of u sir onkala santhithu pasunathula perumai sir………..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மாலினி 22 பாளையம்கோட்டை விமர்சனம்

‘அறுத்துபுடுறேன் அறுத்து...’ என்கிற படுபாதக திட்டத்தோடு படம் எடுத்து தியேட்டருக்கு வருகிற ரசிகர்களை உயிர்வதை செய்யும் படங்களை அனுபவித்த அன்பு உள்ளங்களுக்கு, ஒரு நிஜமான அறுப்பு படம்தான்...

Close