வராத மூணு நாளுக்கும் சம்பளம் கேட்ட பலே பவர்! குட்டை உடைக்கிறார் ‘கோலிசோடா’ மில்டன்

வெங்காய வியாபாரிக்கு விரலெல்லாம் கண்ணீர் என்பது போல, தனது நாக்குக்கு எவ்வளவு சுட்டுப்போட்டாலும் உண்மை பேச வராது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் பவர் ஸ்டார் சீனி. கடந்த சில தினங்களுக்கு முன் கோலிசோடா குரூப் தன்னை ஏமாற்றிவிட்டதாக புலம்பியிருந்தார் அவர். அந்த படத்தில் நடிக்க ஆறு நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்ததாகவும் ஆனால் தான் நடிக்க வேண்டிய காட்சிகளை மூன்று நாட்களுக்குள் நடித்து முடித்துவிட்டதாகவும் கூறியவர் வெறும் சம்பள பாக்கி என்று மட்டும் ஒரு விழா மேடையில் பதிவு செய்துவிட்டு போனார்.

பவரின் அந்த அப்பாவி சிரிப்பு பொய் என்கிற பற்பசையால் பளிச்சிடும் உண்மையை இன்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன். ‘அந்த படத்தில் ஆறு நாட்கள் நடிக்க கால்ஷீட் கொடுத்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். ஆனால் மூன்று நாட்களில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசக் கூட அவர் வரவில்லை. வேறாருவரை வைத்துதான் டப்பிங் பேசினோம். அவர் நடித்த மூன்று நாட்களுக்கான சம்பள தொகை செட்டில் செய்யப்பட்டுவிட்டது. அதற்கப்புறம் வராத மூன்று நாட்களுக்கும் சேர்த்து சம்பளம் கேட்டால் யார்தான் கொடுப்பார்கள்?’ என்று கூறியிருக்கிறார் அவர்.

அதிக சம்பளத்திற்கு ஆசைப்படுகிற நடிகர்கள்தான் நாள் கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். அப்படிதான் இவரும் நாள் சம்பளம் கேட்டு ஒப்புக் கொண்டிருக்கிறார் போலும். விஜய் மில்டன் சொல்வது போல வராத மூன்று நாட்களுக்கும் சம்பளம் கேட்கும் இவரை எங்கு போய் முட்டிக் கொள்ள வைப்பது?

Power Star Srinivasan is misleading with his statement on his salary – Goli Soda Director Vijay Milton

Few days ago in an audio release function Power Star Srinivasan has voiced his displeasure with Goli Soda team as they have not paid him the salary for acting in the film. All the news papers and portals have posted his speech thus making the Goli Soda director to put the facts in the right perspective.

Vijay Milton has clarified that Power Star Srinivasan was roped in to shoot for six days, but he completed his schedule in 3 days. Later he did not come for dubbing his portion also. “Power Star Srinivasan shot for 3 days and his salary for 3 days was settled at the end of his 3 shooting schedule. Originally it was planned for six days but got shot in 3 days itself. Who will pay salary for those 3 days he has not shot?” he questioned.

When he demands salary on per day basis and has taken salary for the 3 days he had acted, is it not misleading when he decries that Goli Soda team did not pay his salary?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 6 பேரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, ஆயுள்தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் 3...

Close