வருந்தினார் வைரமுத்து நாக்கை சுருக்கினார் நமீதா

இருக்கிற எல்லா வேலைகளையும் சற்று தள்ளி வைத்துவிட்டு இதை படித்தால் உங்களுக்கு நெஞ்சுவலி பிரஷர் எல்லாம் நிமிடத்தில் காலியாகிவிடும். அப்படியொரு இம்பார்ட்டன்ட் நியூஸ்… நமீதா எல்லா மேடைகளிலும் உச்சரித்து வந்த ‘மச்சான்ஸ்…’ என்ற மந்திர சொல்லை விட்டொழித்துவிட்டார். அவர் வாயார இப்படி அழைப்பார். கைவலிக்க தட்டி சந்தோஷப்படலாம் என்று காத்திருக்கும் ரசிக மகா கோடிகள் சமீபகலாமாக செம புகைச்சலில் இருக்கிறார்கள்.

புகைச்சலில் இருக்கிற அவர்களுக்கு இந்த படுபாதக செயல் யாரால் நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது என்பன போன்ற விபரங்களை தெரிவித்தால் அவர்களின் கோபம், சம்பந்தப்பட்டவர்கள் மீது திரும்ப வாய்ப்பு இருக்கிறது.

ஒவ்வொரு மேடையிலும் இப்படி மச்சான்ஸ் என்ற ஆசை தீர அழைத்து வந்த நமீதா, கடந்த சில மாதங்களுக்கு முன்பும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த மேடையில் கவிப்பேரரசு வைரமுத்துவும் இருந்தார். எனக்கு எதிர்ல இருக்கிற மச்சான்சுக்கும், மேடையில் இருக்கிற மச்சான்சுகளுக்கும் என் அன்பான வணக்கம் என்று நமீதா சொல்ல, விசில் பறந்தது. இப்படி கூப்பிட்டு வச்சு குமுற வச்சுட்டாங்களே.. என்று மனதிற்குள் நினைத்தாலும் அதை காண்பித்துக் கொள்ளாமல் அமர்ந்திருந்தார் வைரமுத்து.

வீட்டுக்கு போனதும் அவர் செய்த முதல் வேலை, ஏம்ப்பா… அந்தம்மாட்ட வரும்போதே சொல்லி வைக்க மாட்டீங்களா? இப்படி என்னையும் மச்சான்னு கூப்பிட்டுச்சுன்னா என்னோட கவுரவம் என்னாவறது என்றாராம். அப்புறம் விழாக்குழுவினர் நமீதாவுக்கு வைத்த வேண்டுகோள், இந்த மச்சானை விட்டுட்டா மரியாதையா இருக்குமே என்பதுதான்.

கவிதை சொல்ற வாயால இப்படி கல்லடி விழுந்திருச்சே என்று கவலைப்பட்ட நமீதா, இப்போது மச்சானை விட்டுவிட்டார். இதனால் பொதுவான ஆல் மச்சான்ஸ் மனமெல்லாம் நிறைஞ்சு வழியுது பெயின்!

Namitha obliging act to Kaviperarasu Vairamuthu

Namitha is one who is as popular in Tamil Nadu as popular heroes even though she seldom appears in big screens now. She would attend all the events that she has been invited and speak generously to please her audience. She call them dearly as ‘Machans’, always.

During an event in which Kaviperaru Vairamuthu participated, Namitha, in her customary way addressed the audience and the guests as ‘Machans’. She seems to have addressed “my greetings to those ‘machans’ who sit in front of me, and those ‘machans’ who sit with me in the stage.”

Hurt by those words, Vairamuthu spoke to the organisers of the event and expressed his unhappiness about it. The organisers in turn have spoken to Namitha about it, and she too felt bad as she unwittingly hurt the poet.

Now she completely stopped calling ‘machans’ in her speech and turn to dignified way.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ சினிமா வௌங்கிரும்டா… ’

சிறு பட தயாரிப்பாளர்களை உண்டு இல்லை என்று ஆக்குவதில் பெப்ஸிக்கு இணை அவர்களேதான். சின்ன்ன்ன்ன்ன்ன்ன பட்ஜெட் படமாக இருந்தாலும், குறைந்தது இத்தனை பேரை வேலைக்கு வைத்துக் கொள்ள...

Close