வர்றோம்… ஆனா வரும்போது? மாணவர்களிடம் ஹீரோக்கள்!
முன்பெல்லாம் பள்ளி கல்லுரிகளில் ஏதேனும் விழா நடக்கிறது என்றால் அதில் கலந்து கொள்ள லோக்கல் போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், அல்லது பட்டிமன்ற பேச்சாளர்களை அழைப்பார்கள். நாலு வார்த்தை பேசினாலும் நல்ல விஷயமாக பேசிவிட்டு போவது அவர்களின் கடமையாக இருந்தது. இப்போதெல்லாம் அப்படியில்லை. கல்லுரிகள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தும் ‘காலேஜ் டே’ வில் முன்னணி நடிகர்களை அழைப்பதற்குதான் ஆசைப்படுகிறார்கள். அவர்களும் வந்த கடமைக்கு நாலு வரி பாடுகிறார்கள். அல்லது படத்தில் போட்ட குத்தாட்டம் ஒன்றை மேடையில் போட்டு அந்த கல்லுரி வளாகத்தை கூரையில்லா தியேட்டராக்கிவிட்டு போகிறார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் ‘சார்ஜ்’ இருக்கிறது என்பதுதான் அதிர வைக்கும் ஆச்சர்யம். வருடா வருடம் கோவையிலிருக்கும் ஒரு என்ஜினியரிங் காலேஜ் மாணவர்கள் அந்தந்த ஆண்டின் முக்கிய ஸ்டார்களை விமானத்தில் அழைத்துப் போய் ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்து வந்து போன செலவுக்காக சில லட்சங்களையும் இவர்களின் கையில் திணித்து அனுப்புகிறார்கள். இந்த வழக்கம் அப்படியே பரவி நாடு முழுவதுமிருக்கிற கல்லுரிகளில் இருந்து நடிகர் நடிகைகளுக்கு அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இதையும் காசாக்கி பார்க்க முடிவு செய்துவிட்டார்கள் அவர்கள். ஒவ்வொரு நடிகரும் இந்த நிகழ்ச்சிகளுக்காகவே ஒவ்வொரு டேரிஃப் வைத்திருக்கிறார்கள்.
இளைஞர்களை நம்பிதான் படங்களே ஓடுகின்றன. மாணவர்கள் இல்லையென்றால் எல்லா தியேட்டரும் ஈ காக்கா யாவாரம் பார்க்க வேண்டியதுதான். இன்று முன்னணி இடத்திலிருக்கும் நடிகர் நடிகைகள் அத்தனை பேரும், இந்த மாணவர்களின் தயவில்தான் தங்கள் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்துகிறார்கள். நிலைமை அப்படியிருக்க, இப்படி டேரிஃப் வைத்து பிடுங்குவது எந்த விதத்தில் நியாயம் என்றே புரியவில்லை. மார்க்கெட்டில் குறிப்பிட்ட உயரத்தில் இருந்த காலத்தில் கூட, மாணவர்களிடம் பணம் வாங்க மாட்டேன் என்று இலவசமாக காலேஜ்களுக்கு போய் வந்தார் நடிகர் ஸ்ரீகாந்த். இப்போதும் அவர் அப்படிதான் என்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றவர்கள் டேரிஃப் போட்டு வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அண்மையில் சென்னை பூந்தமல்லியில் இருக்கும் ஒரு என்ஜினியரிங் கல்லுரி மாணவர்கள் ‘எங்க காலேஜுக்கு வாங்க’ என்று சிவகார்த்திகேயனை அணுகினார்களாம். ஏழு லட்சம் கொடுங்க என்று அவர் தரப்பில் கேட்கப்பட்டதாம். பட்ஜெட் அதிகமா இருக்கே என்று விஜய் சேதுபதியிடம் பேசியிருக்கிறார்கள். அவரோ இரண்டு லட்சம் கேட்டிருக்கிறார். மாணவர்கள் எப்படியோ பணத்தை புரட்டி கொடுத்த பின்புதான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம். நடுவில் இவர்களில் ஆர்வமுள்ள ஒரு இளைஞர், டி.ராஜேந்தரிடம் பேச, ‘தம்பி பத்து பைசா வேணாம். பொழி பொழின்னு பொழியுறேன். எப்ப வரணும்னு மட்டும் சொல்லு ?’ என்றாராம் தொண்டையை கனைத்துக் கொண்டு. மாணவர்கள் எல்லாருமே சேர்ந்து சம்பந்தப்பட்ட அந்த அப்பாவி இளைஞரை நைய புடைத்ததாகவும் கேள்வி.
மாணவர்கள்தான் வருங்கால இந்தியாவை உயர்த்திப் பிடிக்கும் சக்தி என்று ஒருபுறம் பேசிக் கொண்டேயிருக்கிறோம். மறுபுறம் இப்படி நடிகர்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது அவர்களின் புத்தி.
தம்பிகளா… நல்லா வருவீங்கப்பா!
-ஆர்.எஸ்.அந்தணன்
Is it a College Day Celebration or a Reality Show ?
In earlier years for college day celebrations students used to invite eminent persons and scholars to listen to them and/or acknowledge their contribution to the society. Later it was changed in to two sessions – one for academic lecture and the other cultural programme when students would applaud the contribution by popular persons from society and artistes. Now the college day celebrations have been turned to cultural programmes and it includes nothing but entertainment. When it comes to entertainment obviously it is the film artistes who are toast of the day would make it to the college. They sing, dance, act and spill out popular dialogues from films. But this practice has turned to commercial practice with students are different colleges from different districts vying with each other to get hold of a popular and hero or heroine and be their chief guest for the day.
Taking cue with the increase in the demand for their presence in such programmes, film stars have started tabulating a tariff to participate in the function. The tariff also directly relates to the popularity of the star, his antics on the stage, and the hours of participation in such events.
On the one hand it is the students and youth who are backbone to such film stars’ livelihood. While on the other the same youth and students are taxed by the same film stars by fixing a tariff to spend an evening with them. And students blindly follow their matinee idols and even this result in quarrelling with their buddies.
Recently a college union contacted Siva Karthikeyan to participate in their college day celebrations, to which he stated to have given a tariff of Rs.7 lakhs. As their budget could not accommodate this much cost, they tried and got Vijay Sethupathi on board who charged Rs.2 lakhs.
In another instance, student contacted T Rajender for college day event. T Rajender seems to have told him that he would participate and make it a gala one and he does not want any money. But the student was thrashed down by others.
When we crow from rooftops that students are the backbone and pillairs of the nations, the very same backbone and pillairs are being built with hollowness! Do we really care about it?