வால்ட் டிஸ்னி கதையில் அஜீத்!

ராஜா ராணி இயக்குனர் அட்லீயை கொஞ்ச நாட்களாக எங்கு தேடியும் காணக் கிடைக்கவில்லை என்கிறார்கள். அவரோ அடுத்த படத்தின் டிஸ்கஷனுக்காக சென்றிருக்கிறாராம். பொதுவாக ஒரு பெரிய ஹீரோ சம்மதம் தெரிவித்தாலன்றி குழுவோடு சென்று வெளியூரில் தங்கி கதைக்காக மெனக்கடுவதில்லை வெற்றிப்பட இயக்குனர்கள். அந்த வகையில் பார்த்தால் அட்லீயை முடுக்கிவிட்டது யார்? இந்த கேள்விக்கு எல்லாருமே நீலாங்கரை பக்கம் கையை நீட்ட, அங்கே இருப்பது அஜீத்தும் விஜய்யுமல்லவா? அதில் யார் என்கிற சுவாரஸ்யமான கேள்வி துரத்துகிறது.

அஜீத்தைதான் சமீபத்தில் அட்லீ சந்தித்தார். அப்போது அவரிடம் ஒரு கதையை அவர் சொன்னாராம். ஆனால் அது சொந்த சரக்கல்ல. வால்ட் டிஸ்னி படம் ஒன்றை அவருக்கு போட்டு காண்பித்தாராம். இதை அப்படியே உருவறோம். அதில் உங்களை பொருத்துறோம் என்று அவர் சொன்னதை அஜீத் மிக கவனமாக பரிசீலித்து ஆகட்டும்… என்று பச்சை கொடி காட்டிவிட்டாராம். இப்போது ரூம் போட்டு வால்ட் டிஸ்னியின் போல்ட் நெட்டுகளை கழட்டி மாட்டிக்
கொண்டிருக்கிறது அட்லீயும் அவரது குழுவும்.

இந்த படம் கவுதம் மேனன் படத்திற்கு பிறகு துவங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது வதந்தி பரப்புவோர் சங்கம். அட்லீயும் அஜீத்தும் வாயை திறந்து ஆமாங்க என்கிற வரைக்கும் எதுவுமே உண்மையில்லை. அதுதான் இப்போது கிடைத்திருக்கும் உண்மை.

Is Atlee readying the script for Ajith?

Raja Rani Director Atlee was not to be seen for some time in Kollywood. When enquired it was pointed out he has gone out of station for preparing the script. Recently, he met Ajith through Arya when Atlee indicated his interest to direct a film with him. He also seems to have given a brief about the script. Perhaps Ajith’s ‘go-ahead’ nod would have made the director to pursue in making the script a complete one before showing it to the star. It is also said that Atlee seems to be working on the script based on a Walt Disney’s film. Unless either of the party reveals what is going on, it will be another ‘rumour’ doing rounds in Kollywood.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அடுத்த ராமராஜன் ஆகிறார் சசிகுமார் – எல்லாம் பாலா புண்ணியம்!

தமிழ்சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தை விநியோகஸ்தர்கள் எல்லாரும் ஒன்று கூடி ஏலம் எடுத்தது இரண்டே படங்களுக்குதான். ஒன்று ராமராஜனின் கரகாட்டக்காரன். இன்னொன்று தனுஷின் திருடா திருடி. இதில்...

Close