வாஸ்து சாஸ்திரத்தை நம்பும் விவேக்?

‘அதுவேற இதுவேற’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா கமலா தியேட்டரில் நடந்தது. மேடைகொள்ளாத சேர்கள். சேர்கள் முழுக்க ஆட்கள் என்று நிரம்பியிருந்த விழாவில், விவேக்கின் பேச்சு வழக்கம்போல சுவாரஸ்யம். இப்பல்லாம் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்னாலே அந்து அவலாகி நொந்து நுலாகிடுறாங்க மக்கள். ஏன்னா மேடைக்கு முன்னாடி இருக்கிற சேர்களை விட, மேடையில இருக்கிற சேர்களின் எண்ணிக்கை ஜாஸ்தியா இருக்கு. ஒவ்வொருத்தரும் பேசும்போதும் மற்றவங்களுக்கு ஷாக். ஏன்னா அவங்க பேசலாம்னு நினைக்கிற பாயின்ட்டை வேறொருத்தரு பேசிடுவாரு. இவருகிட்ட மைக் வரும்போது என்ன பேசுறதுன்னு தெரியாம முழிக்க வேண்டியிருக்கு.

இவ்ளோ பேரையும் மேடையில் ஏத்தணுமா? இசையமைப்பாளர், பாடல் எழுதினவங்க, படத்தோட டைரக்டர், தயாரிப்பாளர், குறுந்தகட்டை வெளியிடுகிறவர், வாங்குகிறவர் தவிர மற்றவங்க எல்லாம் மேடைக்கு கீழே இருந்தே வாழ்த்தலாமே என்றார் விவேக். (நல்ல யோசனை, நாளை இதே இடத்தில் அவர் நடிக்கும் படமான நான்தான் பாலா படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. மனுஷர் என்ன செய்கிறார் பார்க்கலாம்)

அதற்கப்புறம் அவர் பேசியதை எங்கு கொண்டு போய் வைக்க? ஒருகாலத்தில் தான் நடிக்கும் படங்களில் எல்லாம் வாஸ்து என்கிற விஷயத்தை போட்டு தாளித்து வந்த விவேக், இந்த விழாவில் வாஸ்து பற்றியும் பேசியதுதான் அதிசயம். ஆச்சர்யம். விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பல வருடங்களாக அதே இளமையுடன் இருப்பதாக பலரும் வியந்தார்கள். அது குறித்து பேசிய விவேக், அவருக்கு உள் வாஸ்தும் நல்லாயிருக்கு. (அதாவது மனசு) வெளி வாஸ்தும் நல்லாயிருக்கு (அதாவது முகம்) அதனால்தான் அவரால் இளமையுடன் இருக்க முடியுது என்றார்.

தயாரிப்பாளர் ஜெயசீலன் ஒரு போலீஸ் அதிகாரியாம். அவர் பேசும்போது கிட்டதட்ட புலம்பியே விட்டார். நான் சினிமாவை நேசிச்சுதான் உள்ளே வந்தேன். வந்த பிறகுதான் தெரியுது, இங்க எவ்வளவு பிரச்சனை இருக்குன்னு. என்னாலயே சமாளிக்க முடியல. தயவுசெய்து தயாரிப்பாளர் சங்கம் புதிதாக படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்களுக்கு ஷுட்டிங் போறதுக்கு முன்னாடி கவுன்சிலிங் செய்யணும். அப்பதான் நிறைய தயாரிப்பாளர்கள் நிம்மதியா படம் எடுக்க முடியும் என்றார் பூடகமாக.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரான பாரதிராஜா, இசையமைப்பாளர் தாஜ்நுரை வெகுவாகவே பாராட்டினார். சுச்சுவேஷனையும் வரிகளையும் சொல்லிட்டா போதும், அஞ்சு நிமிஷத்துல ட்யூன் போட்டுக் கொடுக்கிற அளவுக்கு திறமையானவர் அவர் என்றார். இந்த படத்தின் இயக்குனர் திலக்ராஜ் வறுமையில் வாடியவர் என்று இவருக்கு முன்பு பேசினார்கள். அதை குறிப்பிட்டு பேசிய பாரதிராஜா, வாழ்க்கையில வறுமை இருக்கலாம். மண்டயில வறுமை இருக்கக் கூடாது. அந்த விஷயத்துல திலக்ராஜுக்கு வறுமையில்ல என்றும் பாராட்டிவிட்டு அமர்ந்தார்.

Adhu Vera Idhu Vera, audio launched

The audio launch of Adhu Vera Idhu Vera was held on 27th Dec. at Kamala Cinemas, Chennai. Apart from cast and crew, VIPs from film fraternity graced the event.

Speaking on the occasion, Vivek as usual was humorous as well as thought provoking, specifically when he suggested reducing crowding the Dias. On Producers’ Council Chairman looking young   he pointed out that his inner and outer ‘vasthu’ (heart and face) are clean that made him to look younger.

Producer Jayavel a retired police official, who has to face lot of problems during the production of the fim, suggested to Producers’ union to conduct a ‘counselling’ to help the new producers to be aware of the challenges one has to undergo and how to ward off them. A meaningful suggestion indeed.

Director Bharathiraja praised the music composer Tajnoor saying that he is capable of giving lilting tunes within minutes of telling him the situation and the lyrical lines. He also effused in his praise on the director Tilakraj saying many speakers earlier pointed out that the director was very poor in his heydays. He said though the director was from poor community he is rich intellectually and that would keep him in good stead.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா…’ – நா.முத்துக்குமார் பெருமை!

திரைப்பட பாடல்களை ஏதோ ஆடு புழுக்கை போடுவது போல வதவதவென போடுவது மட்டும் கடமையல்ல, அதில் ஒரு நேர்த்தியும், அழகும், பொருளும் வேண்டும் என்று நினைத்து எழுதுகிற...

Close