விஜயகாந்த் வாரிசு சண்முகபாண்டியனின் முதல் படமே காமெடிதானாம்….
ஒரு புதிய ஹீரோவின் சகாப்தம் தொடங்குகிறதா, அடங்குகிறதா என்பதையெல்லாம் காலம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்தின் துவக்கவிழா, தே.மு.தி.க வின் குட்டி மாநாடு போல, அவரது வீடிருக்கும் தெருவையே அடைத்துக் கொண்டு புதிய ஆர்ப்பரிப்போடு துவங்கியது. டைரக்டர் எஸ்.ஏ.சி, சத்யராஜ், பிரபு, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், நடிகர்கள் கார்த்தி, விக்ரம் பிரபு, மயில்சாமி, கருணாஸ், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டவர்கள் மலர்கொத்துக்களோடு வந்து வாழ்த்த, சற்றே நெர்வசோடு மேடையில் நின்று கொண்டிருந்தார் சண்முகபாண்டியன்.
எம்ஜிஆர் அள்ளிக் கொடுத்தவர். விஜயகாந்த் சொல்லிக் கொடுத்தவர் என்று அவரை பாராட்டிய சத்யராஜ், நாங்கள்லாம் சமகாலத்து ஹீரோக்கள். இருந்தாலும் என்னோட வள்ளல் படம் ரிலீஸ் ஆகும்போது ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்து கொடுத்ததுடன், எல்லா தியேட்டர்களுக்கும் அவருடைய ரசிகர் மன்ற தொண்டர்களை அனுப்பி என் படத்திற்கு பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்திக் கொடுத்தவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் சினிமாவில் மட்டுமல்ல, எந்த துறையில் இருந்தாலும், அந்த துறையை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் என்று ஒருமுறை அண்ணா அவரை பாராட்டினார். அதுபோலதான் விஜயகாந்த். அவர் சினிமாவில் இருந்தாலும் சரி, அரசியலில் இருந்தாலும் சரி, அதை தீர்மானிக்கிற சக்தியாக அவர் இருக்கிறார் என்றார். விஜயகாந்த் டூப் இல்லாமல் பைட் பண்ணுவார். ஆயிரம் மெழுகுவர்த்தி எரியும்போது அதில் விழுந்து புரண்டு பைட் பண்ணனும்னாலும் பண்ணுவார். ஜம்ப் பண்ணி குட்டிக்கரணம் அடிச்சுக்கிட்டே பைட் பண்ண சொன்னாலும் பண்ணுவார். அவருக்கு துணிச்சல் அதிகம். அவரைப்போலவே பைட் பண்ணனும்னு நான் சண்முக பாண்டியனை சொல்ல மாட்டேன். ஏன்னா இன்னைக்கு நிறைய வசதிகள் வந்துருச்சு. மெழுகு வர்த்தியில் விழுந்து புரள வேண்டாம். கிராபிக்ஸ்ல பண்ணிக்கலாம். அதனால் அவர் அப்பாவை போல நல்லவராக இருந்தால் போதும். அவரை போல நடித்தால் போதும் என்றார் சத்யராஜ்.
என் மூத்த மகனுக்கு பிரபாகரன்னு பேரு வச்சேன். ஏன்னா எனக்கு தலைவர் பிரபாகரனை ரொம்ப பிடிக்கும். இளைய மகனுக்கு மதுரை சொந்த ஊர்ங்கறதால பாண்டியன்னு வச்சேன். முருகனை பிடிக்கும்ங்கறதால சண்முகவை சேர்த்துகிட்டேன் என்றார் விஜயகாந்த். இந்த மேடையில் அரசியல் பேச மாட்டேன் என்று கூறியவர், பழக்க தோஷத்தில் முதல்வர் ஜெயலலிதாவை வாங்கு வாங்கென வாங்கினார். நிறைய பேர் ஜெயலலிதாவுக்கு பயந்துகிட்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வரல. யாருக்கும் தர்ம சங்கடம் வேணாம்னுதான் நான் பலருக்கும் இந்த நிகழ்ச்சி இருக்கதையே லேட்டா சொன்னேன் என்றவர், என்னை குடிக்கிறேன்னு சொல்றாங்க. குடிச்சா என்ன தப்பு? தெருவுக்கு தெரு நீங்கதானே கடையை திறந்து வச்சுருக்கீங்க? என்றெல்லாம் விளாசினார்.
என் மகன் யாருக்கும் பேட்டி கொடுக்கலேன்னு நினைக்காதீங்க. ஒரு மாசம் ஷுட்டிங் முடியட்டும். அதுக்கப்புறம் யாருக்கெல்லாம் சண்முகபாண்டியன் பேட்டி வேணுமோ, வந்து தாராளமா எடுத்துக்கலாம் என்றார். இறுதியாக விஜயகாந்த் கூறிய விஷயத்தை அவ்வளவு ஈஸியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏன்? சண்முகபாண்டியன் நடிக்கும் இந்த முதல் படம் ஆக்ஷன் படம் இல்லை. காமெடி படம்தானாம்.
Vijaykanth launches his son Shanmuga Pandian
Another son is rising in Kollywood. But this son is from Captain’s staple. Yes, Captain Vijaykanth as he is fondly called by his fans and friends in the film fraternity introduced his son Shanmuga Pandian to Tamil films. He will be seen in the film titled Sagaptham to be produced by Vijaykanth himself. There was huge crowd for the occasion. Those who attended the function include actor Sathyaraj, Directors’ Council chairman Vikraman, actors Prabhu, Karthi, Vikram Prabhu, Karunas, Mayilsamy, lyricist Viveka and many others.
Speaking on the occasion actor Sathyaraj recalled the help Vijaykanth did during the time when his film Vallal was released. He also advised his son Shanmuga Pandian to follow the footsteps of his father in acting skills and being a good human.
While thanking those who have attended the function, Vijaykanth lambasted the present day rulers, making it almost a political meet. While many of his friends and well wishers have not attended for fear with present day rulers, he explained he himself had given the invitation at the last hour so that they could avoid caught in the dilemma. He also requested the media to give his son a month’s time, after which he would be available for giving interview.
It is learnt that Shanmuga Pandian’s debut film Sagaptham will be comedy venture in tune with the present trend in Kollywood.
புரியுதுங்களா மக்களே…?