விஜயலட்சுமியின் கேட்ச் பிக்சிங்!

இனி யாராவது இயலாமல் தோற்றால் கூட, பணம் வாங்கிட்டு தோத்துட்டான் என்கிற அவப்பெயருக்கு ஆளாவதை தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் மேட்ச் பிக்சிங் என்கிற வார்த்தை இன்று கடை கோடி தமிழனுக்கும் பரிச்சயமான பெயராக மாறிவிட்டது. இந்த நேரத்தில்தான் இது பற்றி ஒரு படம் எடுக்க கிளம்பியிருக்கிறார் பத்ரி. சுந்தர்சி யின் சிஷ்யரான பத்ரிக்கு காமெடிதான் கைவந்த கலை. இவர் வசனத்தில் வந்த லேட்டஸ்ட் படம் கலகலப்பு. (இதற்கப்புறமும் சொல்லணுமா பத்ரியின் பயோடேட்டாவை?)

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அழுற ஒரு போட்டோவை பார்த்துட்டு பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டாராம் பத்ரி. ஏராளமான கமென்ட்டுகள் வந்து விழ, அட… இதையே மையமா வச்சு ஒரு படம் பண்ணலாமே என்கிற எண்ணம் வந்துவிட்டது அவருக்கு. மேட்ச் பிக்சிங் பற்றி தெரியுமே ஒழிய, நேரடி அனுபவம் இல்லை அவருக்கு. இந்த பிக்சிங் யாரால் நடத்தப்படுகிறது? எங்கே இதன் தலைமையிடம்? இப்படியெல்லாம் எழுந்த கேள்விகளுக்கு பதில் தேடி கிளம்பினார் பத்ரி. கூடவே அவரது தயாரிப்பாளரும் சேர்ந்து கொள்ள, பதினைந்து நாட்கள் மும்பையிலே சுற்றி வந்தார்களாம். பக்காவான ஒரு ஸ்கிரிப்ட்டுக்கு தேவையான அத்தனை திருட்டுகளும், சூதாட்டங்களும் ரெடி. இண்டு இடுக்கு, திண்டு திமிசு எல்லாவற்றையும் கலெக்ட் பண்ணிக் கொண்டு வந்தவர், கனஜோராக ஒரு கதையை உருவாக்க, மிர்ச்சி சிவா ‘நானே டயலாக் எழுதுறேன் ’ என்று முன் வந்தாராம். படத்தின் பெயர் ‘ஆடாம ஜெயிச்சோமடா’. இந்த படத்தின் விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளிவர தொடங்கிய நாளிலிருந்தே தமிழ்நாடு கிரிக்கெட்டர்கள் தடுமாறி போயிருக்கிறார்களாம்.

அடிப்படையில் ஒரு வழக்கறிஞரான பத்ரி, கிரிக்கெட் பிளேயரான மிர்ச்சி சிவாவிடம் வசன பொறுப்பை கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட்டார். எல்லாம் நினைத்த நேரத்தில் கூடி வந்ததால் நாற்பத்தைந்து நாள் ஷுட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த கட்ட வேலைகளில் இருக்கிறார் பத்ரி. ‘இந்த படத்துல ஒரு அசிஸ்டென்ட் மாதிரி நடந்துகிட்ட சிவாவுக்கு நன்றி சொல்லணும். நான்தானே டயலாக் எழுதினேன்? நானே நடிக்கிறேன்னு அவர் கேட்கவே இல்லை. ஏனென்றால் இது காமெடி படமாக இருந்தாலும், கதை ரொம்ப சீரியஸ் ஆச்சே? அவருக்கு வேற கதை வச்சுருக்கேன்’ என்கிறார் பத்ரி.

சூதுகவ்வும் படத்தில் நடித்த கருணாகரன், நேரம் படத்தில் நடித்த சிம்ஹா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களை ஏற்று நடிக்க, கொஞ்ச நாளாக ஆளையே காணோம் என்று பத்திரிகையாளர்களால் தேடப்பட்ட விஜயலட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். சென்னை 28 தான் விஜயலட்சுமியின் முதல் படம். அந்த படத்திலும் கிரிக்கெட்தான் மையப் ப்ளே. அந்த படம் தாறுமாறான ஹிட். இது போதாதா? ‘விஜயலட்சுமியை சென்ட்டிமென்ட்டுக்காகதானே உள்ளே கொண்டு வந்தீங்க?’ என்று பத்ரியிடம் கேட்டால், ‘இதென்னங்க மேட்ச் பிக்சிங்கை விட கொடூரமான கேள்வியா இருக்கு?’ என்றார் பலத்த சிரிப்புடன்.

எது எப்படியோ? அண்மை காலமாக நல்ல படங்களுக்காக வலை வீசிக் கொண்டிருந்த விஜயலட்சுமி இந்த ‘மேட்ச் பிக்சிங்’ படத்தை ‘கேட்ச் பிக்சிங்’ செய்துவிட்டார். அதுவரை (அவருக்கு ) நிம்மதி.

Yet another film on cricket – Aadama Jaichomada – in Kollywood!

It appears Indian public are not alone in getting attracted to Cricket. Even Kollywood film makers too are lured to this game, now. Cricket centric films have come more in Kollywood than in any other languages including Bollywood.

When it is possible for film makers to tear out a live incident to make a story out of it and release it as a film, the game of cricket has fallen into those hands and with the current and hot subject ‘fixing’. Badri, an advocate by qualification and former associate to director Sundar C, by profession, was attracted to this word ‘fixing’. When he started digging deep how it has penetrated into the modern game, he found a script. Immediately he found a producer and started a film titled ‘Aadama Jaichomada’. Mirichi Siva showed interest in the script and requested to write the dialogues for the film to which Badri has consented. The shoot of the film is already over, and post production work is under progress. Badri in a lighten vein has said that he had to thank Siva as he did not request him to play the lead in the film. On a serious note he said he is readying a script for Siva, for his next film.

Karunakaran of Soodhu Kavvum fame and Simhaa of Neram fame are playing the lead in the film, which has Vijayalakshmi of Chennai 6000028 fame, play the female lead. When asked if Vijayalakshmi was roped in for sentiment reasons, he waved off the question with a loud laugh.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ACTRESS GAZALA

[nggallery id=323]

Close