விஜய்சேதுபதி கால்ஷீட் வேணாம்… கிடைத்தும் மறுத்த ‘தில்’ இயக்குனர்!

‘நான் நின்னது மட்டுமில்ல… தமிழ்நாடே கொண்டாடுற விஜய் சேதுபதியும் என் பக்கத்துல இடம் இல்லாம நின்னாரு….’ இப்படி அமீரால் ஒரு விழாவில் பாராட்டப்பட்டவர் விஜய் சேதுபதி. அவரே சொல்கிற மாதிரி தமிழ்நாடே கொண்டாடுகிற ஒரு நடிகரின் கால்ஷீட் இருக்கு. அவரை வச்சு படம் பண்றீங்களா என்று ஒரு இயக்குனரிடம் கேட்கப்பட, ‘அதெல்லாம் வேணாம் சார்’ என்று அந்த இயக்குனர் மறுத்தால் அவரை பற்றி என்ன நினைப்பீர்கள்? என்ன வேணும்னாலும் நினைச்சுட்டு போங்க. அவரது கட்ஸ் ஐ கொண்டாடவும் கோடம்பாக்கத்தில் ஒரு கூட்டம் இருக்கிறது.

தமிழ்சினிமாவில் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே ஷ்யூர் ஹிட் என்று பெயர் வாங்குவது யானை காதில் எறும்பு மேய்ப்பதற்கு ஒப்பானது. அந்த பெருமையை ஒரு ட்ரெய்லரிலும் ரெண்டு பாடல்களிலுமே சம்பாதித்துவிட்டார் மதயானை கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமார். இந்த படத்தின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது கோடம்பாக்கம். அதற்குள் விக்ரம் சுகுமாருக்கு அடுத்தபட அட்வான்சை கொடுத்துவிட்டார் ஒரு தயாரிப்பாளர். பெரிய விநியோகஸ்தராகவும் இருக்கிற இவர், மதயானை கூட்டம் படத்தை முழுமையாக பார்த்துவிட்டாராம். அதனால்தான் இந்த அவசரம்.

எங்கிட்ட விஜய் சேதுபதியோட கால்ஷீட் இருக்கு. அடுத்த படம் நீங்க அவரை வச்சு  பண்ணுறதுன்னா கூட ஓ.கேதான் என்று கூறிய அந்த தயாரிப்பாளரிடம், எனக்கு பெரிய ஹீரோ யாரும் வேணாம் சார். நான் அவங்க கூட ஓடி களைக்க தயாராக இல்லை. என் சொல்பேச்சு கேட்டு நடிக்கிற சாதாரண புதுமுகம் இருந்தா போதும். என்னை நம்பி படத்தை ஆரம்பிங்க என்றாராம் அவர்.

விஜய் சேதுபதி கால்ஷீட்டுக்காக தவம் கிடக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு துணிச்சலான பதிலை அறிந்த இன்டஸ்ட்ரி, விக்ரம் சுகுமாரை தொலைவில் இருந்தே பிரமிப்பாக பார்க்க ஆரம்பித்திருக்கிறது. உங்க தன்னம்பிக்கை வெல்லட்டும் பிரதர்…

Director Vikram Sugumar declines Vijay Sethupathi Call sheets

Director Vikram Sugumar is not even one film old. His debut film Madha Yanai Koottam has already impressed the Kollywood fraternity with the show case of 2 songs and the trailer. A producer who happened to see the complete film was hugely impressed and wasted no time in contacting the director. He paid advance to Vikram and told the director that he got Vijay Sethupathi’s call sheets and he can make use of for his film. The director seems to have responded saying that he does not want call sheets of popular heroes as he cannot dance to their tunes. He would only do the film with new face who listens to me. It is always good to have self-belief than depending on others.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கஞ்சா கருப்புவை கலங்க வைத்த பாலா

தானே தயாரித்த வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தனது எதிரிகளுக்கும் வீடு தேடி சென்று இன்விடேஷன் வைத்தார் கஞ்சா கருப்பு. எதிரிகளையே அழைத்தார் என்றால்,...

Close