விஜய்யை ஃபாலோ பண்ணுகிறார் அஜீத்?

விஜய் படங்களைதான் தரை டிக்கெட் மாஸ் என்பார்கள் சினிமாவுலகத்தில். ஒரே ஒரு ஃபார்முலாவை மட்டுமே வைத்துக் கொண்டு அதை மிக சரியாக கொண்டு செல்வார்கள் அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்கள். கடைகோடி ரசிகனுக்கும் படம் பிடிச்சிருக்கணும் என்பதுதான் விஜய்யின் ஒரே கொள்கையும் கூட. ஆனால் அஜீத் அப்படியல்ல, ஒவ்வொரு படமும் ஒவ்வொரு டைப்பாக இருக்கும். ஆனால் இந்த தடவை அஜீத் பின்பற்றியிருப்பது விஜய்யின் ஸ்டைலை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். விரைவில் வெளிவரப்போகும் வீரம், தரை டிக்கெட் மாஸ் லெவல் படம்தானாம்.

இதற்கிடையில் அஜீத் குறித்து இன்னொரு முக்கியமான விஷயம். அஜீத்தும் கே.வி.ஆனந்தும் சமீபத்தில் சந்தித்து பேசினார்களாம். அந்த சந்திப்பு வெறும் வெட்டிப் பேச்சல்ல என்பதை வெகு சீக்கிரம் அறிவிப்பார்கள் போலிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே ரஜினிக்கு கே.வி.ஆனந்த் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும் அதை பிரபல மூன்றெழுத்து நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் நடுவில் ரஜினிக்கு ஜாதகப்படி நேரம் சரியில்லை என்று அறிவுறுத்தப்பட்டதால் அவரும் கப்சிப் ஆகிவிட்டார். இப்போது நல்ல நேரம் ஸ்டார்ட்.

ஆனால் கே.விஆனந்தை அழைக்க வேண்டிய ரஜினி, ஷங்கரை அழைத்ததாக கேள்வி. காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை புரிந்து கொண்ட ஆனந்த், அஜீத்தை சந்தித்து கதை சொன்னாராம். இதனால் கலங்கிப் போயிருக்கிறார் கவுதம்மேனன். இவர் யாரை கரெக்ட் பண்ணி வைத்திருந்தாலும், நடுவில் ஏதேனும் ஒரு கழுகு புகுந்து இரையை அபேஸ் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இந்த முறை அந்த கழுகு கே.வி.ஆனந்த்தாகவும் இருக்கலாம் என்பது கவுதமின் ஐயம்.

Ajith’s Veeram is said to be a complete mass film

Ajith who normally tries his hand on variety of roles in his film is said to have followed Ilayathalapathi Vijay’s policy in Veeram. Vijay who always wanted that his film should reach the last person in the theatre hall, prefers always to give such a mass film. This time Ajith too has given a mass film through his Veeram, according to Kollywood sources.

Meanwhile, director KV Anand who is busy shooting his film Anegan has met Ajith. The sources say it is not a courtesy call but the meeting has a purpose. The director seems to have narrated a story line to Ajith which he likes it seems. Soon they may come out with official announcement, add the sources. KV Anand perhaps realised that there is no point in waiting for the super star because the information about Shankar-Rajini’s reuniting for Endhiran 2, is gaining a strong foothold.

Though the talks are in preliminary stage, this has definitely made director Gautham Menon to sit up and make a note of it. Because now he cannot afford any delay in finalising the script and readying for his film with Ajith.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கடனை கஷ்ஷ்ஷ்ஷ்ட்ப்பட்டு அடைத்தார் விஜய் இருப்பவர் போற்றட்டும்… இறந்தவர் வாழ்த்தட்டும்!

கடன் அன்பை முறிக்கும் என்பதை காலம் கடந்து புரிந்து கொண்டிருக்கிறார் விஜய். இன்று அவரை வைத்து படம் எடுத்து பாழாய் போன ஐந்து குடும்பங்களை அழைத்து அவர்களுக்கு...

Close