விஜய்வசந்த் – நிகிஷா பட்டேல் நடிக்கும் “சிகண்டி“
தரமான படம் என்றும் – பக்கா கமர்ஷியல் பார்முலா என்றும் – வியாபார வெற்றிபெற்ற படம் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட படம் “ என்னமோ நடக்குது” விஜய்வசந்த், மகிமா, பிரபு சரண்யா என்று நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த இந்த படம் அமோக வெற்றி பெற்றது. ராஜபாண்டி இயக்குனராக அறிமுகம் ஆனார்.
இதை தொடர்ந்து விஜய்வசந்த் நடிக்கும் படம் “ சிகண்டி “
நிகிஷா பட்டேல் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், சரண்யா, மனோஜ்.கே.பாரதி நடிக்கிறார்கள். கௌரவ வேடத்தில் நடிக்க சூரியிடம் பேசிக் கொண்டிருகிறோம்.
அழுத்தமான – வேறுபட்ட கதாப்பாத்திரம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்க உளார். அதற்கான பேச்சு வார்த்தையில் உள்ளனர்.
இந்தப் படம் எப்படி என்று இயக்குனர் ராஜபாண்டியிடம் கேட்டோம்…
பள்ளிக் கல்வி சம்மந்தமாக சில படங்கள் ஏற்கனவே வந்திருக்கிறது. மேலும் வரலாம். அவர்கள் இதுவரை சொல்லாத, சொல்லப்படாத விஷயங்கள் நிறைய இருக்கிறது.
அந்த விஷயங்களை முழுமையாக தருவதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதகாலம் சம்மந்தப்பட்ட கல்வியாளர்கள் – சமூக ஆர்வலர்கள், பத்திரிகை நண்பர்களுடன் ஆலோசித்து உள்ளோம்..பல நல்ல தகவல்களை திரட்டி உள்ளோம்.அதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறோம்.
ஒரு இயக்குனராக என் பார்வையில் கல்வியின் தரம் – குறிப்பாக பள்ளிக் கல்வியின் தரம் இப்படியெல்லாம் இருக்கலாமே என்கிற ஆதங்கம் இந்த சிகண்டியில் வெளிப்படும்.
படம் பார்க்கிற ஒவொருவரும் படத்தில் எதோ ஒரு சம்பவத்தில் தன்னை தொடர்பு படுத்தி பார்க்க முடியும். படப்பிடிப்பு விரைவில் துவங்கி படம் மே மாதம் வெளியாக உள்ளது. “ என்னமோ நடக்குது” படத்தை போலவே “ சிகண்டி “ படத்தையும் அதிக பொருட்செலவில் டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத்குமார் தயாரிக்கிறார் என்றார்.