விஜய் அழைப்பு… ஓடிய நிருபர்கள்… போன இடத்தில் ‘பொசுக்!’

ஃபேஸ்புக், ட்விட்டர் , இணையதளங்கள் போன்ற நவீன யுகத்தை பற்றி அதிகம் அலட்டிக் கொள்பவரல்ல விஜய். ஆனால் அவரை ஆட்டோ ஆட்டென ஆட்டி வைப்பதும் இதுபோன்ற சமூக வலைதளங்களும் இணையதளங்களும்தான். ‘கடுபேத்துறங்க யுவர் ஆனர் ’ என்று கதறக்கூட முடியாதளவுக்கு பழைய பஞ்சாகத்தில் ‘லாக்’ ஆகிக் கிடக்கும் விஜய், நேற்றும் அப்படிதான். பத்து பதினைந்து நாளிதழ் நிருபர்களுக்கும் ஒரு சில வார இதழ் நிருபர்களுக்கும் அழைப்பு விடுத்தார். இவர்களை தனித்தனியாக போன் செய்து அழைத்த அவரது பி.ஆர்.ஓ, ‘விஜய் சார் உங்ககிட்ட மட்டும் தனியா பேசணுமாம். வர்றீங்களா’ என்று அழைக்க, போட்ட வேலையை போட்டபடி ஓடினார்கள் அத்தனை பேரும். ஏதோ வலுவான செய்தியாக இருக்கும். எக்ஸ்க்ளூசிவாக போட்டு தாக்கிவிடலாம் என்பதுதான் அவர்களின் பேராசை.

ஆனால் அந்த பேராசை நிராசையாகி போனது கொஞ்ச நேரத்தில். நமக்குதான் தனி பேட்டி என்று போனவர்களுக்கு அங்கு இவர்களுக்கு முன்பாகவே வந்து நின்ற சக நிருபர்களை பார்த்ததும் வௌங்குச்சு எல்லாமும். அட… ஏமாந்துட்டமே என்று முதலில் நினைத்தாலும் எல்லாரையும் நைசாக அனுப்பிவிட்டு நாம மட்டும் எக்ஸ்க்ளுசிவா ஒரு கேள்வி கேட்டு அதை தலைப்பு செய்தியாக்கிடணும் என்கிற ‘நரி’முறையும் இருந்தது அவரவர் மனசுக்குள்.

ஆனால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக உள்ளே அழைத்த விஜய், ‘அண்ணே… தயவு செய்து பேட்டின்னு ஒரு கேள்வி கூட கேட்றாதீங்க. இந்த படத்தை சுமூகமா பிரச்சனையில்லாம ரிலீஸ் பண்ணிடனும்னு நினைக்கிறேன். நீங்க ஏதாவது கேட்க, நான் ஏதாவது சொல்ல, செவனேன்னு இருக்கிற ஏரியாவை அந்தல சிந்தலயாக்கிட்டு போயீராதீங்க’ என்றாராம் பணிவன்புடன். இதை தவிர அவர் வாயிலிருந்து சிங்கிள் வார்த்தையை கூட பெற முடியாத நிருபர்கள் பெருத்த ஏமாற்றத்தோடு ரிட்டர்ன்.

Vijay briefed the press about Jilla release

After the serious problem he faced during the release of Thalaivaa, Ilayathalapthi Vijay makes his moves very carefully. When he speaks he measures his words carefully to avoid any controversy. Now his next film Jilla is readying for release he is doing his homework so that the film gets a smoother release. As a first step, he met the reporters of dailies and magazines at his office. He politely requested them that he does not want to give any interview only to avoid any controversy arising out of it. “I want a smoother release of my film and seek your cooperation” requested Ilayathalapathi Vijay.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஈரானியனுக்கு நாம யாருன்னு காட்டுவோம்…

சசி... நான் உன்னை பார்க்க வரணும்... இது பாலுமகேந்திரா. எங்க இருக்கீங்க சார், நானே வர்றேன்... இது டைரக்டர் சசிகுமார். இல்லைப்பா நானே வர்றேன். ஏன்னா தேவை...

Close