விஜய் உத்தரவு – தியேட்டர்களை வளைத்துக் கொண்டிருக்கும் ஜில்லா!

வெட்டி வேரா இருந்தாலும் விறகுக்கு ஆவுமான்னு பார்க்குற ஊர் இது. வெட்டி வேரா, விறாகான்னே தெரியல… ஆனால் சமீபத்தில் அதிகம் உஷ்ணத்தை தருகிற இடத்திலிருக்கிறார் விஜய். அரசியலே பேசாம ஒரு படத்தை விட்டேன். அதுல அரசியல் இருக்குன்னு எழுதி எழுதியே அதை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை உண்டாக்கினாங்க. அதற்கப்புறம் ஃபுல்லா அரசியல் பேசியே ஒரு ஹீரோவின் படம் வந்துச்சு. ஆனால் ஒரு சேதாரமும் இல்லையே அதுக்கு? என்கிறாராம் தனக்கு நெருக்கமானவர்களிடம். இருந்தாலும் ஜில்லாவை ஹிட்டாக்குவதுதான் அவரது ஒரே லட்சியமும் குறிக்கோளுமாக இருக்கிறது.

பொங்கலுக்கு படம் வந்துடணும். கடைசி நேரத்தில் தியேட்டர் கிடைக்கலேன்னு காரணம் சொல்லக் கூடாது. அதனால் இப்பவே தியேட்டர்களை வளைக்கிற வேலையில் இறங்குங்க என்று கூறிவிட்டாராம். ஒரு படம் தாமதம் ஆவதற்கு முழு முதல் காரணமாக அப்படத்தின் ஹீரோவே இருப்பதை பலமுறை கண்ணார கண்டு காதார புகைவிட்ட கோடம்பாக்கத்தில், இவ்வளவு வெறியோடு ஹீரோ களமிறங்கிய பின் சும்மாயிருக்க முடியுமா? நம்பிக்கையோடு தியேட்டர்களை வளைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

முதல் கட்டமாக திருநெல்வேலி பகுதியிலிருக்கும் தியேட்டர்கள் ஜில்லாவுக்காக வளைக்கப்பட்டுவிட்டதாம். அவ்வப்போது திருநெல்வேலி நாளிதழ்களில் வெளியிடப்படும் ஜில்லா விளம்பரங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தியேட்டர்களின் பெயர்களும் இடம்பெறுவது மற்ற ஏரியா தியேட்டர்காரர்களின் ஆர்வத்தை கிளறி வருகிறது. கடைசி நேரத்தில் ரஜினி படமோ, அஜீத் படமோ வராமல் போகக் கூடும் என்கிற எண்ணத்தையும் இந்த தியேட்டர் புக்கிங் ஏற்படுத்தி வருகிறதாம்.

Vijay now takes the initiative for Jilla

Vijay has to double his resources and skills in order to stamp his prominence to the industry. Not that, industry is not aware of it. But the present situation is such that Vijay needs to take the initiative and establish that his credentials are in fact, intact. On the one side the controversy surrounding his previous film Thalaivaa still pricks him. On the other side the latest information coming from the trade circle that Super Star Rajnikanth is planning to release his film for Pongal. Also Ajith’s film too confirmed for Pongal. Now Vijay has to take 2 biggies in the industry to make him count by the trade.

As a first step he has reportedly told the makers to make sure that the film is released for Pongal. Also he has told them to block as much theatres as possible for Jilla, as there should not be any last minute hitch in securing the theatres for the film. It is also said that few of the theatres in and around Thirunelveli has been blocked and advertisement for Jilla coming in those theatres are being issued from the local dailies.

Though we are not sure if Pongal would showcase triangular fight or a straight fight and between whom, still the fight will be a fascinating one considering 3 biggies of Kollywood are part of it.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எதுவா இருந்தாலும் ரேகாவை கேளுங்க… -ஹன்சிகா ஆவேசம்!

எவ்வளவு ஸ்டிராங்கான பில்டிங்காக இருந்தாலும் அஸ்திவாரத்திலிருந்து நாலைந்து செங்கல்லை பிடுங்கினால் கட்டிடமே காலி. ஹன்சிகா சிம்புவின் காதல் பில்டிங்கில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஆட்டம் கண்டு...

Close