விஜய் என்னை ஏமாத்திட்டாரு… பூர்ணா புலம்பல்!

இன்று வெளியாகியிருக்கும் தகராறு படத்தில் பூர்ணா படு பயங்கரமான வில்லியாக நடித்திருக்கிறாராம். படத்தில்தான் அப்படியா, இல்ல நிஜத்திலேயே நீங்க வில்லிதானா என்று விஜய் ரசிகர்கள் கொந்தளிக்கிற அளவுக்கு அவர் புலம்பி வருகிறாராம். பெரிய குடும்பத்தில் பிறந்த (சே அந்த பெரிய இல்ல. இது வீட்ல இவரையும் சேர்த்து ஆறு பேர் என்ற கணக்கில் சொல்லும் இந்த பெரிய…) பூர்ணா தனது நெடுநாளைய கனவு வீட்டை இப்போதுதான் கேரளாவில் கட்டி முடித்திருக்கிறார். இந்த வீட்டை அவர் கட்ட ஆரம்பித்ததும் முடித்ததும் வெகு சீக்கிரம் நடந்து முடிந்த நிகழ்வல்ல. படங்கள் வரவர படங்களுக்கு ஏற்ற சம்பளங்கள் வந்து சேர சேர கட்டிய வீடு. அதனால்தான் தாமதமாம்.

இந்த வீட்டை ஒரு மாதத்தில் கூட கட்டி முடித்திருக்கலாம். ஆனால் பெரிய ஹீரோக்கள் யாருமே கை கொடுக்கலையே? எல்லாரும் என்னை அழகுன்னு சொல்றாங்க. நல்லா நடிக்கிறேன்னு சொல்றாங்க. பட்… அவ்வளவு பேரும் வாய்ப்பு கொடுத்திருந்தால் கூட, கேரளாவில் ஜில்லாவுக்கு ஒரு வீடா கட்டி முடிச்சிருக்கலாமே என்பது பூர்ணாவின் புலம்பல்.

இந்த விஷயம் பற்றி பேசுகிற அவர் செவனேன்னு இருக்கிற விஜய்யை வம்புக்கு இழுத்ததுதான் கொடுமை. நடிகர் விஜய் கூட என்னை அசின் மாதிரி இருக்காரு என்று ஒரு விழாவில் என்னை பலருக்கும் முன்னிலையில் புகழ்ந்தார். ஆனால் அவரே வாய்ப்பு கொடுக்கலையே என்கிறார் பூர்ணா.

Poorna says she is disappointed with her offers

Poorna who is slowly picking up roles in Kollywood felt that she has been let down by the industry and big heroes as none had offered her the chance to steady her career. Having been in the industry for more than 5 years she has not got any good roles or to act with big heroes of the industry, and hence she is still a small time player. She has even accused Vijay, who once said that she resembles Asin, too did not give her a good opportunity. Poorna should understand that opportunity and offers would not on the recommendations of others but on its own. It is up to the person to make good of the opportunity.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நீண்ண்ண்…ட இடைவெளிக்கு பிறகு ராகவேந்திரர் கோவிலில் ‘ரஜினி தரிசனம்’

ரஜினி எந்த கடவுளை வணங்குகிறாரோ, அந்த கடவுளை வணங்குவது அவரது ரசிகர்களின் வழக்கம். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணியில் இருக்கும் ராகவேந்திரர் கோவிலை யாரும் கவனித்தது கூட இல்லை....

Close