விஜய் சேதுபதி மனசு எல்லாருக்கும் வரணுமாம்…

இலங்கை தமிழர்களின் இன்னல்களை சொல்ல வரும் இன்னொரு படமாக உருவாகி வருகிறது ‘அலைகள் அலைகள்’. இந்த மாதிரி படங்களை சம்பந்தப்பட்ட இலங்கை தமிழர்களே கூட ஓட வைப்பதில்லை என்கிற சோகம் ஒருபுறம் இருந்தாலும், திரை நேர்த்தி இல்லாத படங்கள் செத்தொழிந்து போவதுதான் சரி என்பதால் நிற்க. ‘அலைகள் அலைகள்’ படத்தின் ரிசல்ட் எப்படி என்பதை தெரிந்து கொள்ள இன்னும் சில மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டும். ஆனால் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தமிழ் திரையுலகத்தின் முக்கியமானவர்களான கேயார், னவேல்ராஜா, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, விஜய் சேதுபதி, டி.இமான் உள்ளிட்ட பலர் வந்திருந்தார்கள். அவர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தன பாடல்களும் ட்ரெய்லரும்.

முக்கியமாக விஜய் சேதுபதி இந்த படத்தை வெகுவாகவே புகழ்ந்தார். பொதுவாக எல்லா குறும்படங்களையும் பார்த்து ரசித்து, அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருபவர் அவர். அப்படிப்பட்டவரே இந்த படத்தை பற்றி புகழ்ந்து பேசுகிறார் என்றால், செய்நேர்த்தி சிறப்பாக இருக்கும் என்றே நம்புவோம்.

‘இந்த படத்தை நான் முன்னாடியே பார்த்துட்டேன். அவ்வளவு பிரமாதமா இருக்கு. முக்கியமா பேக்ரவுண்ட் ஸ்கோர் சொல்லணும். மியூசிக் டைரக்டர் தன்வீர் ரொம்ப அற்புதமா உருவாக்கி கொடுத்திருக்கார். இந்த படம் நிச்சயம் வெற்றி பெரும்’ என்றார் விஜய் சேதுபதி. ‘நாங்கள்ளாம் ரொம்ப கஷ்டப்பட்டுதான் மேலே வந்தோம். கஷ்டப்பட்டு வர்றவங்களை சினிமா கைவிடாது. அதே மாதிரி இந்த படக்குழுவும் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருக்காங்க. இந்த படம் ஹிட்டாகும்’ என்றார் விஜய் சேதுபதியுடன் மூன்று படங்களில் ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா.

இந்த விழா ‘அலைகள் அலைகள்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவா? விஜய் சேதுபதிக்கு பாராட்டு விழாவா? என்று ஐயப்படுகிற அளவுக்கு அவரை புகழ்ந்து தள்ளினார்கள் எல்லாரும். அவரோட நல்ல மனசுக்கு இன்னும் பெரிய பெரிய வெற்றிகள் காத்திருக்கு. இன்னைக்கு பல ஹீரோக்கள் சினிமா விழாக்களுக்கு வர்றதே இல்லை. ஆனால் விஜய் சேதுபதியை முறையாக சென்று அழைத்தால் தெரிஞ்சவங்களா இருந்தாலும் சரி, தெரியாதவங்களா இருந்தாலும் வர்றார். அவர் சின்ன படமா, பெரிய படமான்னு வித்தியாசமெல்லாம் பார்ப்பதில்லை. இந்த மனசு எல்லாருக்கும் வரணும் என்றார்கள் விழாவில் பேசிய அத்தனை பேரும்.

ஒவ்வொரு முறை விஜய் சேதுபதியின் பெயரை சொல்லும்போதெல்லாம் விசிலடித்து உற்சாகம் காட்டியது ரசிகர் கூட்டம்.

Alaigal Alaigal audio launch held

Alaigal Alaigal audio launch was held on 20th Feb. with stalwarts from the industry, viz. Producers’ Council Chairman Kayaar, producer-distributor Gnanavel Raja, Amma Creations Siva, D. Imman and Vijay Sethupathi, along with the cast and crew of the film.

The film, yet another one, is about the sufferings of Sri Lankan Tamils. The film is expected to hit the theatres in few months from now. Vijay Sethupathi was the star of the event. He praised eloquently about the film. He said he has seen the film already and it was brilliantly made, especially the back ground score of music director Thanveer. He hoped the film become a sure success.

Speaking on the occasion Aishwarya who paired with Vijay Sethupathi in 3 of his films said that the cast and technicians have worked hard in this film and they will definitely taste success, as how she and other new artistes have succeeded in film industry by working hard.

Those who graced the event were full of praise for Vijay Sethupathi’s humility. One of the speakers said in present day circumstances big heroes are not coming to such events, whereas Vijay Sethupathi does not discriminate whether he is invited by known or unknown persons and grace every event which is a good sign of his humility. Others should learn to have such big heart like Vijay Sethupathi, everyone endorsed in their speech.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஐஸ்வர்யா ராய் பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை – பி.வாசு ஆவேசம்

காக்கா கூட்டத்தில் கல்லெறிந்த மாதிரி, பி.வாசுவின் புதுப்பட செய்தி குறித்த தகவல்களால் ஒட்டுமொத்த இந்தியாவும் ஆடிப் போனதுதான் ஆச்சர்யம். பி.வாசு என்பவரையும் அவர் தமிழ் பட இயக்குனர்...

Close