விஜய் முருகதாஸ் இணையும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?

ஜில்லா படப்பிடிப்பு ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் என்பதால் வேகம் கூடிக் கொண்டே போவது ஒரு புறம் இருந்தாலும், தனது அடுத்த படத்தை பற்றியும் இப்போதே சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்தான் அடுத்து அவர் நடிக்கப் போகிறார் என்பது ஊரறிந்த விஷயம். இந்த படத்தின் கதை என்ன? காமெடியன் யார் என்பது பற்றியெல்லாம் இப்போதே மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் சராசரி ரசிகனுக்கு இல்லையென்றாலும் விஜய் ரசிகர்களுக்கு இருக்கணுமே?

அவர்களுக்காக விசாரித்தால், கிடைக்கும் தகவல்கள் இனிப்பு, காரம், மணம் கூடியதாக இருக்கிறது. அண்மையில் வெளிவந்த விஜய் படங்களில் அவருக்கு ரொம்பவே பிடித்த படம் என்றால் அது துப்பாக்கிதான். ஏனென்றால் விஜய்யின் வெகுகால ஏமாற்றத்தை போக்கிய படம் மட்டுமல்ல, கலெக்ஷனில் விஜய் படங்களில் புதுப்பாய்ச்சல் காட்டிய படமும் கூட.

அதே முருகதாஸ் இயக்கத்தில் தான் மீண்டும் நடிக்கும் படத்திற்கு துப்பாக்கி செகன்ட் பார்ட் என்று விளம்பரம் கொடுத்தால் கூட தப்பில்லை என்று நினைக்கிறாராம் விஜய். அது மட்டுமல்ல, துப்பாக்கி கதையின் தொடர்ச்சியாகவே இந்த கதையும் இருந்தால் நலம் என்பதும் விஜய்யின் விருப்பமாக இருக்கிறது. முதல் கட்டமாக படத்திற்கு பெயர் வைத்து விட்டார்களாம். ரொம்ப ரொம்ப ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் நமது பல்லி காதில் பளிச்சென விழுந்திருப்பதால் சுட சுட நம் வாசகர்களுக்கு சொல்லிவிடுகிறோம்.

அதிரடி!

விஜய் பட அறிவிப்பு என்றாலே அது அதிரடியாகதான் இருக்கும். ஆனால் இங்கு படத்தின் பெயரே அதிரடியாக இருப்பதால், ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

Vijay-Murugadoss project gets the title

Vijay having wrapped up the shoot of Jilla on 10th Dec. will be eager to take up his next film with director Murugadoss. Vijay-Murugadoss combination had earlier in the year gave the blockbuster Thuppakki. Vijay wanted to have similar action packed script for his next film too, which sentiments he had expressed to his director. The duo are now working on fine tuning the script to catch the fancy of the audience in general and his fans in particular. It is reliably learnt that they have titled their project as ‘Athiradi’. Though there has been no official confirmation about the title, the name itself suggests that it will be an action packed one. And so it is expected that the title would give Vijay’s fans with enough bites in social networking sites.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆடியோ கம்பெனிகளின் அட்ராசிட்டி? பலியாகும் பாடலாசிரியர்கள்…

ஆடியோ கம்பெனிகளின் அட்ராசிட்டி பற்றி அறம் பாடாமல் ஓய மாட்டார்கள் போலிருக்கிறது சினிமா பாடலாசிரியர்கள். இவர்கள் எழுதிய பாடல்களுக்கான ராயல்டி தொகை ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் அவர்களுக்கோ,...

Close