விவேக் முட்டாள் இல்ல… குருநாதரின் பேச்சால் குஷியான விவேக்!

ஆசிர்வாதங்கள் நிரம்பிய மேடை அது. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் புடைசூழ வந்திருந்து புது விவேக்கை வாழ்த்தினார்கள். அதென்ன புது விவேக்? ‘நான்தான் பாலா’ படத்தில் அவர் வெறும் காமெடி விவேக் அல்ல, ஹீரோ விவேக்! முன்பு இருமுறை இதே ‘பால்’ கைதவறி போன தவிப்பில் இருந்த விவேக், இந்த முறை நல்லோர்களின் ஆசியுடன் அதை ‘கேட்ச்’ பிடித்துவிட்டார். முன்னதாக திரையிடப்பட்ட ட்ரெய்லரும், பாடல்களும் ‘விவேக் அச்சா ஹை’ சொல்ல வைத்தது. அதிலும் தன் காதலி காட்டிய சைகையை உள் வாங்கிக் கொண்டு ஒரு நடை நடக்கிறாரே… மனுஷன் பின்றாரு…!

Air ல் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் என்று டைமிங்காக வரவேற்க அவரால்தான் முடியும். விழாவுக்கு வந்திருந்த வி.ஐ.பி களை தனக்கேயுரிய நகைச்சுவையோடு அவர் வர்ணித்து வரவேற்றார். பதற்றத்தில் பாலசந்தரை மறந்துவிட மீண்டும் பதறி வந்து மைக்கை பிடித்தார். கல்யாண நேரத்துல தாலிய மறக்கிற மாதிரி நான் என் குருநாதரை மறந்துட்டனே என்றார். குருநாதர் மட்டும் சும்மாவா? தன் சிஷ்யனை செல்லமாக வாரினார். நான் அவனை முட்டாள்னு கூப்பிடுவேன். ஆனால் ரொம்ப புத்திசாலி அவன். எங்கிட்ட சான்ஸ் கேட்க வரும்போதே அவன் எழுதிய புதுக்கவிதைகளையெல்லாம் கொண்டு வந்து காட்டிதான் வாய்ப்பு வாங்கினான். ஒருமுறை ஷுட்டிங் போயிருந்தேன். பார்த்தால் ஒரு வானவில். அது மறையதுக்குள்ள படம் பிடிச்சுரணும்னு நினைச்சேன். ஆனால் அதை படத்தில் வெறுமனே காட்ட பிடிக்கல. அங்கு விவேக் நின்று தன் நண்பனிடம் அந்த வானவில் பற்றி புதுக்கவிதை பேசினால் நல்லாயிருக்கும்னு தோணுச்சு.

உடனே அங்கே நின்று கொண்டிருந்த அவனை அழைச்சு, வானவில்லை பற்றி உடனே ஒரு புதுக்கவிதை எழுதுடான்னு சொன்னேன். அந்த வானவில் மறையறதுக்குள்ள எழுதணுமேன்னு பதற்றம். இருந்தாலும் அழகா எழுதிட்டான். அப்புறம் அவனை பேச வைச்சு அதை எடுத்தேன் என்று விவேக்கின் புத்திசாலித்தனத்தை பாராட்டினார்.

நான் பிளைட்ல போகும்போது சில நேரங்களில் மைண்ட் ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள விவேக் சாரோட காமெடி பார்ப்பேன். அவர் சார்லி சாப்ளின் மாதிரி என்று வாழ்த்தினார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரே ஒரு ஈ மெயிலில்தான் அழைத்தாராம் விவேக். அதற்கே நியூயார்க்கிலிருந்து வந்து சேர்ந்துவிட்டது புயல்.

இரண்டு வருஷமா என்னை துரத்தி துரத்தி இந்த கதையை சொன்னார் கண்ணன். இது நமக்கு சரியா வருமான்னு நானும் பிடி கொடுக்காமலிருந்தேன். பிறகு ஒரு நாள் டைரக்டர் பாலாதான் இது உங்களுக்கு பொருத்தமான சப்ஜெக்ட்னு சொன்னாரு. பிறகு ஒருநாள் கமல் சாரை மீட் பண்ணியபோது அவரும், ‘நீ வேறொரு தளத்துக்கு போக வேண்டிய நேரம் இது’ என்று சொன்னார். படக்குன்னு நடிக்க ஒத்துகிட்டேன் என்றார் விவேக்.

இந்த படத்தில் மந்திரம் சொல்லும் பிராமணராக நடித்திருக்கிறார் விவேக். இதற்காகவே சமஸ்கிருத மந்திரங்களை அவர் கற்றுக் கொண்டாராம். அதுபோகட்டும்… நேற்று இதே மேடையில் வேறொரு இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவேக், மேடை கொள்ளாம முப்பது சேரை போட்டு வயித்துல பீதிய கிளப்புறாங்க என்று குறைபட்டுக் கொண்டார். அவரது விழாவில் என்ன நடக்கும் என்று ஆவலோடு காத்திருந்த அத்தனை பேருக்கும் செம குத்து. வேறொன்றும் இல்லை. மேடையில் ஆறு சேர்களுக்கு மேல் இல்லை. அவர்களும் அளவோடு பேசி முடித்தார்கள். நடுவில் ஜம்மென உட்கார்ந்திருக்க வேண்டிய விவேக்கே மேடைக்கு எதிரே உட்கார்ந்து நிகழ்ச்சியை ரசித்தது, கோடம்பாக்கத்தின் வரலாற்றிலேயே இல்லாத விஷயம்.

விவேக்… உங்களை ஃபாலோ பண்ண வேண்டிய நேரம் வந்தாச்சு!

 

Vivek is intellectually brilliant – K Balachandar praises Vivek

The audio launch of Naan Thaan Bala was held today at Kamala Cinemas Chennai with full participation of cast and crew. However it is special for the presence of stalwarts from the industry who came to wish a ‘new look’ Vivek. Director K. Balachandar, Director Manirathnam, Director Bharathiraja, Mozart of Madras AR Rahman made their presence with their enterprising speech.

Vivek thanked everyone of the dignitary describing their skill and popularity humorously. It is to be noted that he followed his suggestion made on 27th Dec. in another audio launch, when he said to keep only dignitaries with film director and music composer and lyricist on the dias instead of crowding. Not only was it followed, but Vivek himself set an example by sitting it from the rows and enjoying the event.

Speaking on the occasion K. Balachandar recalled how Vivek used to visit him every time with fresh poems when he came asking for chance. He also said on one occasion Vivek wrote a poem in no time and recite the same in the shooting. But the point is he was asked to write and recite the poem before the ‘rainbow’ vanishes from the sky. The director pointing out the incident said that Vivek is intellectually brilliant.

Isai Puyal AR Rahman who came specifically to attend the event from New York, said that whenever he travels he listens to Vivek’s thought provoking comedy. He praised Vivek as Chalie Chaplin of Kollywood.

Speaking on the event Vivek said the director Kannan was after him for two full years for casting him in the film. He finally relented on the advice of director Bala and Kamal Hassan.

Everyone hoped that ‘new Vivek’ will mesmerise the audience with his added skills in the film. It is said for the character Vedic Brahmin he learnt the  rituals and mantras before started acting in the film.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தேவதைப்பாட்டு உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை – 5 முருகன் மந்திரம்

இதயம் ஒரு அதிசய வீடு. அதற்குள் பூட்டிக்கிடக்கும் அறைகளின் கதவுகள் கணக்கில்லாதது. அன்பின் உரசலில் உண்டாகிவிட்ட எல்லைக்கோடுகளை கடக்க முடியாமல்… உயிரின் உள்ளே ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது பல...

Close