‘வீட்டு முன்னால நின்னு அசிங்கப்படுத்துவேன்…’ -த்ரிஷாவை எச்சரித்த தயாரிப்பாளர்! ‘முடிஞ்சா டச் பண்ணிப்பாரு… ’ -தயாரிப்பாளரை ஓட விட்ட த்ரிஷா!

‘எக்ஸ்ட்ரா லார்ஜ்’ கோபத்திலிருக்கிறார் த்ரிஷா. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதெல்லாம் கேட்கறதுக்கு நல்லாயிருக்கும். கொஞ்சம் உரசிப் பாரு தெரியும் என்கிற அளவுக்கு அவரை சுற்றி தீ! சரக்கடித்துவிட்டு ஆந்திராவையே அல்லோகல்லோலப்படுத்திவிட்டதாக அவர் மீது கறைபூசி ஒரு வாரம் ஆகவில்லை. அதற்குள் இன்னொரு நபர் ‘வீட்டுக்கே வந்து அசிங்கப்படுத்திடுவேன்’ என்று எச்சரித்தால் எப்படியிருக்கும்?

தனது மொத்த ஆத்திரத்தையும் அவர் மீது ஏவிவிட்டு மேலும் கீழும் மூச்சிரைக்க உட்கார்ந்திருக்கிறாராம் த்ரிஷா. அவர் யார்? த்ரிஷாவை இவர் திருக திருக முறுக்கியதன் பின்னணி என்ன?

தமிழில் ‘சின்னா’ என்ற படத்தை தயாரித்தவர் சீனிவாச ராஜு. இவர் ஒரு தெலுங்கு தயாரிப்பாளர். ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ படத்தை பாதியில் நிறுத்திவிட்டு கவுதம் மேனனின் கவட்டையை பிடித்து நசுக்கியவரும் இவர்தான். அதற்கப்புறம் வினய்க்கு அட்வான்ஸ் கொடுத்து ஒரு படத்தை ஆரம்பித்தார். அங்கேயும் பிரச்சனை. கொடுத்த அட்வான்சை திருப்பிக் கொடு என்று அவரது சட்டையை பிடித்து வம்புக்கு இழுத்தது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்து ஒரே நாளில் தனது அட்வான்சை திருப்பி வாங்கியவர்.

டைரக்டர் சரணிடம் ஒரு படத்தை இயக்க சொல்லி அட்வான்சை கொடுத்துவிட்டு அந்த பணக்கட்டுகளை பிரிப்பதற்கு முன்பே அவரது வீட்டுக்கு போய், ‘கொடுத்த அட்வான்சை திருப்பிக் கொடுக்கலேன்னா போலீசுக்கு போவேன்’ என்று மிரட்டியவர். படம் எடுக்க ஆசையாகவும் இருக்கு, அதே நேரத்தில் சினிமாவின் தட்ப வெப்பநிலை குறித்து அச்சமாகவும் இருக்கு என்பதை வெளிப்படையாக சொல்லாமல், எல்லாரையும் நிக்க வச்சே முதுகெலும்பை வளைக்கிற குணம் இவருக்கு இருப்பதாக கூறுகிறார்கள் திரையுலகத்தில்.

இவருக்கும் த்ரிஷாவுக்கும்தான் இப்போது அடிதடி…

ப்ரியம் பாண்டியன் இயக்கத்தில் திரிஷாவுக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி ஒரு படத்தை எடுத்து வந்தார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் சீனிவாசராஜுதான். ரம்யா நம்பீசன், பூனம் பாஜ்வா, இவர்களும் நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனியும், தம்பி ராமய்யாவும் நடிக்கிற படம் இது. இதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம் த்ரிஷாவுக்கு. அதில் அரைவாசி தொகை அவரது கைக்கு போய்விட்டதாகவும் கூறுகிறார்கள். இந்த படத்தின் மீதிருக்கும் அதீத நம்பிக்கையின் காரணமாக விஷாலை நானே பேசி கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கிறேன் என்று வாக்குறுதியும் கொடுத்திருந்தார் த்ரிஷா.

ப்ரியம் பாண்டியன் மீதிருக்கும் பிரியத்தின் காரணமாக சம்பளமே வாங்காமல் நடிக்க முன் வந்தார்கள் சமுத்திரக்கனியும் தம்பி ராமய்யாவும். எட்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் சென்னையிலிருக்கும் ஆபிசை காலி பண்ணிவிட்டாராம் சீனிவாசராஜு. அதற்கப்புறம் படப்பிடிப்பு நடக்கவேயில்லை. வழக்கம் போல கொடுத்த அட்வான்சை திருப்பிக் கொடு என்று குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம் சீனிவாசரு.

அதற்கெல்லாம் மசிபவரா த்ரிஷா? ‘எட்டு நாள் ஷுட்டிங்குக்கு வந்து நான் நடிச்சு கொடுத்ததுக்கே உங்க அட்வான்ஸ் பணம் சரியாப் போச்சு. அட்வான்சை திருப்பி கேட்கிற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்’ என்று எச்சரிக்க…, ‘பணத்தை தரலேன்னா உன் வீட்டுக்கு முன்னால வந்து அசிங்கப்படுத்துவேன்’ என்று இவர் எகிற…. ‘முடிஞ்சா வந்துப்பாரு’ என்று த்ரிஷா அதட்ட… ரணகளமாகிக் கிடக்கிறது ஏரியா. ஒருவேளை சீனிவாச ராஜு தன் வீட்டுக்கு முன்னால் வந்து கதறி அழுது கூட்டத்தை கூட்டினால் போலீசுக்கு போகவும் தயாராகி வருகிறாராம் அவர்.

ஆந்திராவில் செல்வாக்காக இருக்கும் சீனிவாச ராஜு ‘எப்படியும் நீ தெலுங்கு படத்துல நடிக்க அங்க வந்துதானே ஆகணும்? வச்சுக்குறேன் உன்னை’ என்று எச்சரித்திருப்பதாகவும் தகவல் கசிகிறது கோடம்பாக்கத்தில்.

மோரு விக்க வந்துட்டு இப்படி பானைய போட்டு உடைச்சுட்டாங்களே….!

Angered Trisha challenges the Producer

Srinivasa Rahu, a film maker from Telugu film industry has locked horns with Chennai girl Trisha. The producer is notorious for announcing the films and abandoning it mid way thereby putting many actors and directors with lot of discomfiture. Director Priyam Pandian was directing a film for Srinivasa Raju, in which Trisha along with Poonam Bhajwa, Ramya Nambeesan, director Samudhrakani and Thambi Ramaiah were doing important roles. Samudhrakani and Thambi Ramaiah in fact have agreed to play their roles without taking salary purely on the love and affection on Priyam Pandian. However, the shooting was abandoned, after 8 days of its commencement, as the producer left Chennai closing his office. He returned couple of days ago and went to Trisha and asked her to return the advance money paid to her. She reportedly told him that she has acted in 8 days of shoot and refused to return any money. Agitated Srinivasa Raju reportedly threatened and abused her in filthy language. He also said to have challenged that he would ensure that she would not do any films in Telugu nor go there for any shoot. Enraged Trisha, challenged the producer to do what he can and she will deal with it appropriately. It is also said that Trisha is ready take him head-on and file a complaint against the producer if he shows up again and threaten her. Sometimes Cinema has become real one and so to be taken seriously, perhaps!

Read previous post:
இடத்தை காப்பாத்திக்கறது எப்படி…? – அஜீத், விக்ரமுக்கு ரஜினி ஆலோசனை

மழைக்கு ஒதுங்குவதற்கு வேறு வேறு இடங்களை வைத்திருக்கிற தமிழ்சினிமா ஹீரோக்கள் பலர், தங்களின் ‘பிழை’க்காக ஒதுங்குவதற்கும் ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். அது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இல்லம்....

Close