வீரம், ஜில்லா ரெண்டுமே அவுட்! உண்மையை போட்டு உடைத்த கேயார்

அஜீத்தின் வீரமும் சரி, விஜய்யின் ஜில்லாவும் சரி. மிகப்பெரிய ஹிட்… ஒரே வாரத்தில் 60 கோடி கலெக்ஷன் என்றெல்லாம் எழுதி ஊர் வாயில் உப்புமா சட்டியை பற்ற வைத்த ஊடகங்கள் சிலவற்றுக்கு நேற்றைய பொழுது ஷாக் பொழுதாக இருந்திருக்கும். தமிழ்சினிமாவின் அதிகார பதவியிலிருக்கும் கேயாரே உண்மையை போட்டு உடைத்துவிட்டார்.

முன்பெல்லாம் எல்லா திரைப்பட விழாக்களிலும் மைக்கை பிடிப்பார் கலைப்புலி சேகரன். இவர் அப்போது விநியோகஸ்தர் சங்க தலைவராக இருந்தார். படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் உண்மையான நிலவரத்தை புட்டு புட்டு வைப்பார். இதன் காரணமாக முன்னணி ஹீரோக்களுக்கு செஞ்சோற்று கடன் தீர்க்க காத்திருக்கும் பல ஜால்ராக்களின் பொய்கள் எடுபடாமலே போய் கொண்டிருந்தது. ஒரு சந்தர்பத்தில், ‘நீ இனிமே எங்கேயும் கலெக்ஷன் பற்றி பேசவே கூடாது’ என்றெல்லாம் அவருக்கு வாய் மொழி உத்தரவு போட ஆரம்பித்தார்கள். அதற்கெல்லாம் சளைத்தவரா அவர்? விடாமல் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்புறம் அவரை எதற்கும் அழைக்காதீர்கள் என்று கூறி அவரது நடமாட்டத்தையே குறைத்தார்கள். இப்போது சினிமா சம்பந்தமான எந்த பொறுப்பிலும் அவர் இல்லை. அதனால் இஷ்டத்திற்கும் கப்சா விட ஆரம்பித்தது திரையுலகம். அப்படிதான் வீரம், ஜில்லாவுக்கு ஒரே வாரத்தில் அறுபது கோடி கலெக்ஷன் என்கிற பொய்யும் நடமாடியது.

நேற்று ‘குக்கூ’ பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், ‘இந்த 2014 ம் வருஷத்தில் வெளியாகி ஓடிய ஒரே ஹிட் படம்னா அது கோலிசோடாதான். பெரிய பெரிய பட்ஜெட் படங்கள் என்று சொல்லப்பட்ட படங்கள் எல்லாம் படு பயங்கர லாஸ். தயாரிப்பாளருக்கு பத்து பைசா தேறல’ என்று கூறினார். அவர் வீரம், ஜில்லாவைதான் சொல்கிறார் என்பதை புரிந்து கொண்ட பலரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

தயாரிப்பாளர்களின் தங்க அண்ணாக்கயிறை உருக்கிதான் கிரீடம் செய்து கொள்கிறார்கள் இந்த படாடோப ஹீரோக்கள். இதில் படத்திற்கு படம் சம்பளத்தை வேறு கோடி கோடியாக ஏற்றிக் கொண்டே போகிறார்கள். தங்க முட்டை போடுற வாத்தையெல்லாம் அறுத்துட்டோம். ஆனாலும் வட நாட்லேர்ந்து வர்ற வாத்துகளும் சந்தோஷமா பின்பக்கத்தை காட்டுதே? என்ன செய்ய…?

Goli Soda is the only film that made profit to everyone in 2014 – Kayaar

During the audio release of the film Cuckoo Producers Council Chairman Kayaar has broken the false image that has been doing rounds in Kollywood that big heroes films are collecting whopping amount in its first couple of weeks release.

Speaking on the occasion that while small budget films are to be given the helping hand so that not only new talents surfaced in the Kollywood, but also it helps many others to have a fruitful life as well. Revealing the facts, he said that it was the small budget film Goli Soda which has done very good business in 2014, giving profit for everyone, right from producers to theatre owners, artistes and the technicians as well. The so called big heroes’ films have drummed up having collected huge amount of money in its first couple of weeks release, are false, as those producers have not seen any profit, he declared. He then urged the media and the press to support the cause of small budget films. Incidentally Kamal Hassan and Suriya shared the stage with Kayaar must have felt embarrassed at his remarks.

Read previous post:
வராத மூணு நாளுக்கும் சம்பளம் கேட்ட பலே பவர்! குட்டை உடைக்கிறார் ‘கோலிசோடா’ மில்டன்

வெங்காய வியாபாரிக்கு விரலெல்லாம் கண்ணீர் என்பது போல, தனது நாக்குக்கு எவ்வளவு சுட்டுப்போட்டாலும் உண்மை பேச வராது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் பவர் ஸ்டார்...

Close