வீரம் படத்திற்கு U சர்டிபிகேட்! சென்சார் பாராட்டுடன் அஜீத்தின் பாராட்டையும் பெற்ற சிவா

வீரம் படத்திற்கு யூ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தணிக்கை சான்றிதழுக்கான சிறப்பு காட்சியில் படத்தை பார்த்த உறுப்பினர்கள் இயக்குனரை பாராட்டினார்களாம். அதுமட்டுமல்ல, படத்திற்கு எவ்வித குடைச்சலும் கொடுக்காமல் யூ சான்றிதழ் கொடுத்து கவுரவப்படுத்திவிட்டார்கள்.

இந்த தகவல் உடனடியாக அஜீத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வீரம் படத்தின் முதல் பிரதி பார்த்து சந்தோஷப்பட்டிருந்தாராம் அஜீத். அப்போதே, ‘சிவா முக்கியமான கமர்ஷியல் டைரக்டர் வரிசையில் இடம் பிடிச்சிட்டாரு’ என்று பாராட்டியிருந்தாராம். எல்லாவற்றையும் மறுபடியும் ஒரு முறை நினைவு கூர்ந்த அஜீத், யூ சர்டிபிகேட்டுக்காக மறுபடியும் சிவாவை அழைத்து பாராட்டியிருக்கிறார்.

சரி…. பொங்கலுக்கு சென்னையில்தானே இருக்கிறார் அஜீத்? அதுதான் இல்லை. குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு பறக்கிறாராம். பொங்கலுக்கு வெளிவரப்போகும் படங்களில் முதலில் சென்சார் சர்டிபிகேட் வாங்கிய படமும் வீரம்தான்.

Ajith’s Veeram gets clean U from censors

Ajith’s Veeram is the first film which will be releasing for Pongal to have received the censor certificate, that too a U certification. The members of the Board who have seen the film were impressed and congratulated the director. They have given U certification for the film without suggesting any cuts. The director Siva is very happy with the development. Ajith was informed about this and he had called director Siva and congratulated him. He has praised him that Siva would now be a successful commercial director.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எங்க சார் நிம்மதியா படம் எடுக்க விடுறாங்க? குத்துசண்டை படத்துக்கே கும்மாங்குத்து!

நார்த் மெட்ராஸ் பக்கம் போனால், தெருவுக்கு தெரு குத்துசண்டை பயிற்சியாளர்கள் இருப்பார்கள். இளைஞர்களுக்கு இந்த சண்டையை கற்றுக் கொடுத்து ஒலிம்பிக்குக்கு அனுப்பப் போகிறார்களா என்றால் அதுதான் இல்லை....

Close