வெண்டைக்காயில விதை இல்ல… கத்திரிக்காயுல காம்பு இல்ல… அந்த கதையெல்லாம் சத்யராஜ்கிட்ட இல்ல…!

வெண்டைக்காயில விதை இல்லேன்னா கோவிச்சுக்கிறது, கத்திரிக்காயில காம்பு இல்லேன்னா சண்டை போட்டுட்டு ஷுட்டிங் வராம போறது… இப்படி சாதாரண ஹீரோக்களே ஷுட்டிங் சாப்பாட்டு மெனுவை கிழித்துப் போடுகிற அவஸ்தையை அநேகமாக எல்லா படக்குழுவினரும் சந்தித்திருப்பார்கள். ஆனால் கிட்டதட்ட 300 படங்களை தாண்டிவிட்ட சத்யராஜ், அட போங்கப்பா… அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. இதுல காட்டுற உப்பு உரைப்பை ஸ்கிரிப்ட்ல காட்டுங்க என்று கூறிவிடுவாராம்.

திடீரென பொங்கலுக்கு களத்தில் குதித்திருக்கும் கலவரம் படத்தில் சத்யராஜ்தான் ஹீரோ. படத்தின் இயக்குனர் ரமேஷ்செல்வன், உளவுத்துறை என்ற படத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்தின் கதவுகளை திறந்துவிட்டவர். அந்த படத்தில் விஜயகாந்தை அண்டர்வாட்டரில் மிதக்கவிட்டு படம் எடுத்தவர். நடுவில் ஏதேதோ போராட்டங்களுக்கு பிறகு கலவரம் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிக்கும் சத்யராஜ் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொண்ட விதத்தைதான் வியப்போடு வர்ணித்தார் அவர். சில நேரங்களில் சாப்பாடு சரியில்லேன்னா நாங்க புரடக்ஷன் ஆட்களை கடிஞ்சுப்போம். ஆனால் சத்யராஜ் சார் ஒருநாள் கூட அப்படி சொன்னதேயில்ல என்றார்.

அதற்கப்புறம் பேசிய சத்யராஜ், மணிவண்ணன் சார் கூட எங்கிட்ட இது சம்பந்தமா சொல்லியிருக்கார். ஏங்க படத்தோட ஹீரோ நீங்க. ஒண்ணுமே சொல்லாம சாப்பிட்டா எப்படி? ஏதாவது குறை சொன்னால்தானே உங்களால எங்களை மாதிரி மற்றவங்களுக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கும். இப்படி இருக்கீங்களே என்பார் என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

பத்து நாட்கள் ஷுட்டிங் நடந்து முடிந்த பிறகுதான் சத்யராஜிடம் கதை சொல்லி நடிக்க அழைத்தாராம் ரமேஷ் செல்வன். முதலில் ஏதாவது சொல்லி கழட்டி விட்டுருவோம் என்று அமர்ந்த சத்யராஜ், கதையை பாதி கேட்கும்போதே நான் ரெடி என்றாராம். இதுக்கு முன்னாடி ஒவ்வொரு முறையும் வாய்ப்பை தவற விட்டிருக்கேன். இந்த ஷியூர் ஹிட் அடிச்சுரணும் என்றார் ரமேஷ்.

கலவரம் எப்பவுமே மற்றவர்களை கவனிக்க வைக்கிற விஷயம்தானே?

Sathyaraj playing the lead in Kalavaram

Sathyaraj after playing character roles has come back to play the lead in the film titled Kalavaram, directed by Ramesh Selvan, who has earlier directed Vijaykanth’s super hit film Ulavuthurai. Now he is coming up with his next film after a long gap. The release of the film is planned for Pongal 2014, to compete with other two biggies – Veeram and Jilla.

Speaking during the pre-release press meet, Ramesh Selvan lauded the star Sathyaraj saying that he never faced any problem during the shoot. Even he did not complain about the food served. He further said that he has told the story to Sathyaraj only after the commencement of the shoot. While he was half way through with the story, Sathyaraj Sir immediately agreed to do the film, himself. He exudes confidence that this time he would make sure that the film hits the bull’s eye.

Sathyaraj while speaking responded to Ramesh Selvan’s compliments, recalling that even late Manivannan used to ask him to complain about the food so that people like him would get good and tasty food.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கொஞ்சம் மசாலா Thookkalaaaa ஒரு படம் போடுங்க….!

காரம், மணம், குணமுள்ள மசாலா பாக்கெட் நிறுவன உரிமையாளர் ஒருவர் படம் எடுக்க வந்தால், அந்த படத்தில் எவ்வளவு மசாலா இருக்கும்? சில வாரங்கள் காத்திருந்தால் அந்த...

Close