வெண்ணிலாக் கபடிக்குழு செகண்ட் பார்ட்…

தமிழ்சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு ஒரு ட்ரென்ட் செட்டர் படம். அப்படத்தின் வெளிச்சம் மற்றவர்களுக்கு எப்படியோ, டைரக்டர் சுசீந்திரன் மீது நன்றாகவே அடித்தது. இந்த படத்தின் கதை சுசீந்திரனின் அப்பா வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்றும் கூறப்பட்டது. திண்டுக்கல் அருகில் மிகப்பெரிய கபடிக்குழுவை நடத்தி வந்தவர்தானாம் அவர். அவரது குடும்பமே கபடி குடும்பம் என்பது விசேஷம். இப்போது விளையாடுகிற பருவத்தில் இல்லை என்றாலும், இந்த குடும்பத்தை கபடி கைவிடவே இல்லை.

சுசீந்திரனின் சித்தப்பா மகன் இப்போது இயக்குனராகப் போகிறாராம். வெண்ணிலா கபடிக்குழு இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்கள். படத்தை தயாரிப்பதும் சுசீந்திரனின் சித்தப்பாதானாம். இந்த படத்தின் கதை வசனத்தை சுசீந்திரன் எழுத, இயக்குகிற வேலையை மட்டும் அவரது சித்தப்பா மகன் கவனிப்பதாக ஏற்பாடு. இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத இந்த படத்தின் ஹீரோ அங்காடி தெரு மகேஷ்.

நஸ்ரியா சைசுக்கு தம்மாத்துண்டு இருக்கும் சரண்யா மோகன் கதாநாயகியாக நடித்த படம் அது. மறுபடியும் சரண்யாவையே அழைக்கிறார்களாம். ட்ரெண்டுக்கு ஏற்ப, நஸ்ரியாவை அழைக்கலாமே கபடி பிரதர்ஸ்…?

Vennila Kabadi Kuzhu sequal in the offing!

Vennila Kabadi Kuzhu was a trend setter for Tamil film, and the film was a nice launching pad for the director Seseendhiran. It is learnt that Suseendhiran had made the film out of real life experience happened in his father’s life. His father and his family would be called under the nick name Kabadi family. Now another member of the family, cousin brother of Suseendhiran will be making a sequel to Vennila Kabadi Kuzhu for which the story, screen play and dialogues have been entrusted to Suseendhiran.  Though no official announcement has been made, Angadi Theru Mahesh has been roped in to play the lead. Saranya Mohan has been retained for the sequel too, to play the female lead

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்… நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்…

"விஜய் சேதுபதி, தினேஷ்னு புதுமுகங்களை அங்கீகரித்து வாழ்த்தும் தமிழ் சினிமா, நிச்சயம் என்னையும் கொண்டாடும்" - நம்பிக்கையோடு பேசுகிறார் விஷ்வா. 'ஒரு மழை நான்கு சாரல்' படத்தில்...

Close