வேந்தர் வீட்டு கல்யாணம்

(ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு)

வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதுமையான, வித்தியாசமான நிகழ்ச்சி, வேந்தர் வீட்டு கல்யாணம். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியை, ரிஷி மற்றும் நிஷா இருவரும் தொகுத்து வழங்குகின்றனர். இந்தப் புதுமையான நிகழ்ச்சியை நடன இயக்குநர் கலா மாஸ்டர் இயக்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் ஜோடிகளுக்கு சுவாரஸ்யமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அனைத்துப் போட்டிகளுமே திருமண வாழ்க்கைக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜோடிகள், ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு இந்த நிகழ்ச்சி உறவுப் பாலமாக அமைகிறது.

ஒவ்வொரு வாரமும் 4 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இறுதியில் வெற்றிபெறும் ஜோடிக்கு, பத்து லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. ஜோடிகளுக்கு திருமணப் பரிசு தரும் இந்த நிகழ்ச்சி, வேந்தர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பை அன்றைய தினமே இரவு 8 மணி முதல் 9 மணி வரை கண்டு ரசிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கமல்ஹாசனின் நாயகன் படம் கூட காப்பிதான்! ஆவேச கூத்தாடிய மிஷ்கின்

, kamal, lenin, நாட்டிய தாரகை ஸ்வர்ணமுகியை, தெரு முக்குல கரகாட்டம் ஆடக் கூப்பிட்டிருந்தால் கூட இவ்வளவு கோபப்பட்டிருப்பாரா தெரியாது. ஆனால் மகா கலைஞன், ஒரிஜனல் கதை...

Close