வைரமுத்துவுக்கு பிறகுதான் வாலியாம்… கோச்சடையானின் குரூர பார்வை!

‘அவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டாரையே மேடையில கூட்டத்தோட கூட்டமா நிக்க வச்சுட்டாங்களேப்பா…’ இந்திய சினிமாவின் 100 வது ஆண்டு விழாவில் ரஜினிக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை தன்னுடைய அவமானமாக கருதிய மக்கள் தெரு முனையிலும் டீக்கடைகளிலும் நின்று நின்று புலம்பிய வார்த்தைகள்தான் இவை.ரஜினி அந்த மேடையில் அவமதிக்கப்ட்ட விஷயத்தை பெருங்கருணையோடு மக்களுக்கு கொண்டு சென்றது மீடியா.

தகுதிக்குரிய நபர்களை மதிக்காத எவரையும் தன்போக்குக்கு விடுவதில்லை மக்கள் மனசு. அன்று ரஜினிக்காக கவலைப்பட்ட அதே மக்கள் இன்று அதே ரஜினி இப்படி செய்யலாமா என்று குமுறுகிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. இன்று வெளிவந்திருக்கும் ‘கோச்சடையான்’ விளம்பரத்தில் வாலியின் பெயரை வைரமுத்துவின் பெயருக்கு அடுத்த இடத்தில் போட்டு, தமிழுக்கே வலி ஏற்படுத்தியிருக்கிறார்கள் கோச்சடையான் குழுவினர். இந்த விளம்பரம் ரஜினியின் அனுமதி இல்லாமல் வந்திருக்க வாய்ப்பே இல்லை.

எவ்வளவுதான் தமிழுக்கு அத்தாரிடி நான்தான் என்பது போல வைரமுத்து பேசினாலும், நடந்து கொண்டாலும் வாலியின் எழுத்தாற்றலும் அனுபவமும் வைரமுத்துவுக்கு குறைவுதான். வாலி தொட்ட உயரங்களை வைரமுத்து தொடுவதற்கு இன்னும் காலம் பிடிக்கும். அப்படிப்பட்ட நபரின் பெயரை வைரமுத்துவின் பெயருக்கு அடுத்த இடத்தில் வைத்தது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்த அவமரியாதை சரி என்று ரஜினி தரப்பு வாதிடுமானால், அன்று அந்த மேடையில் ரஜினிக்கு இழைக்கப்பட்டதும் சரியே!

அடுத்த விளம்பரங்களிலாவது தவறை செய்து கொள்வார்களா?

Is it a slip or is it made that way?

Kochadaiiyaan film makers have released publicity poster for the audio release of the film in which the name of Kavignar Vaalee was put behind Kavignar Vairamuthu. This has disturbed the feelings of many Tamil writers as well as those who know about Vaalee and Vairamuthu. Though Vairamuthu is one of the versatile writer and poet in Tamil, it is a fact that he is yet to fill the void left by Vaalee for his poetic verse and experience. By putting Valee’s name behind Vairamuthu, the makers of the film have not only denigrated the great poet and writer Vaalee, but also disrespected him. Will the makers take notice and correct their folly in future publicity materials, please?

2 Comments
  1. Vanniya thevan says

    sss…..appaaaaa.. mudiyala.

  2. Common Man says

    Enna Sir…Audio release ku free invitation kodukaliya?? 😉

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
239 பேருடன் மலேசிய விமானம் மாயம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது. காலை 6.30...

Close